மக்கள் அனைவரும் பெரும்பாலும் பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்யத் திட்டமிடுகிறார்கள். வங்கிகளைப் போலவே அஞ்சல் துறைகளிலும் பல்வேறு முதலீட்டு சேமிப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக்கும் திட்டம் ஒன்று அஞ்சல் துறையில் உள்ளது தெரியுமா? இந்த திட்டம் உங்களுக்கு உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது. மேலும், இந்தத் திட்டம் அரசாங்கத்தால் நடத்தப்படுவதால் ஆபத்தும் மிகக் குறைவு.
அஞ்சல் அலுவலகத்தின் இந்தத் திட்டம் கிசான் விகாஸ் பத்ரா (KVP). தற்போது இத்திட்டத்தின் கீழ் ஆண்டு 7.5% சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. கிசான் விகாஸ் பத்ரா என்பது இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு வகை மொத்த முதலீட்டுத் திட்டமாகும், இதன் கீழ் வட்டி காலாண்டு அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில், குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை இரட்டிப்பாக்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய அஞ்சல் அலுவலகம் மூலம் கணக்கைத் தொடங்க வேண்டும்.
115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும்
தபால் அலுவலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா யோஜனா (KVP) கீழ், குறைந்தபட்ச முதலீடு ரூ.1000 முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இத்திட்டம் ஆண்டுக்கு 7.5 சதவீதம் வருமானமாக வட்டி அளிக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 2023-ல், அதன் வட்டி விகிதங்கள் 7.2% சதவீதத்தில் இருந்து தற்போது 7.5% சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. முன்பு இந்தத் திட்டத்தில் பணம் இரட்டிப்பாக்க 120 மாதங்கள் ஆகும், ஆனால் இப்போது பணம் வெறும் 115 மாதங்களில் அதாவது 9 ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்களில் இரட்டிப்பாகும்.
6 லட்சம் என்பது 12 லட்சமாக மாறும்
இந்த KVP திட்டத்தில் நீங்கள் 6 லட்சங்களை முதலீடு செய்தால், ஆண்டுக்கு 7.5 சதவிகிதம் என்ற விகிதத்தில், 6 லட்சம் பணம் 12 லட்சமாக மாறும். கணக்கீட்டின்படி, பணத்தை இரட்டிப்பாக்க 115 மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதாவது, உங்கள் பணம் 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களில் இரட்டிப்பாகும். மறுபுறம், நீங்கள் மொத்தமாக 7 லட்சத்தை முதலீடு செய்தால், இந்த காலகட்டத்தில் இந்த தொகை 14 லட்சமாக மாறும்.
KVP-'யில் ஜாயிண்ட் அக்கவுண்ட்
இந்த KVP திட்டத்தின் கீழ் நீங்கள் தனிநபர் கணக்காகவும், அல்லது உங்கள் துணை மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து ஒரு கூட்டுக் கணக்காகவும் திறக்கலாம். இருப்பினும், இந்தத் திட்டத்தின் கீழ் நாமினியைச் சேர்ப்பது கட்டாயமாகும். நீங்கள் விரும்பினால் 2 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களுக்குப் பிறகு இந்தக் கணக்கையும் மூடலாம். மேலும் விவபரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை தொடர்புகொள்ளவும்.