இந்தியாவில் அரசு மானியங்கள் மற்றும் அரசு நடத்தும் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களில் ஆதார் அட்டையும் ஒன்றாகும். முழுப்பெயர், நிரந்தர முகவரி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட குடிமக்கள் பற்றிய முக்கியத் தகவல்கள் இருப்பதால், இது பல்வேறு தேவைகளுக்கு முக்கியமான அடையாளச் சரிபார்ப்பு ஆவணமாகக் கருதப்படுகிறது.