கார் வைத்துள்ளீர்களா.?! இது இல்லாட்டி ரூ.4,000 அபராதம்.! 4 மாதம் சிறை கட்டாயம்.!

Published : Aug 09, 2025, 11:57 AM IST

சாலையில் காப்பீடு இல்லாத வாகனம் ஓட்டினால் ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை அபராதமும், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். மூன்றாம் தரப்பு காப்பீடு விபத்துகளில் ஏற்படும் நிதிச்சுமையைத் தவிர்க்க உதவுகிறது.

PREV
16
வாகன காப்பீடு கட்டாயம்.!

திருத்தப்பட்ட இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் படி, இனி சாலையில் கார், பைக் உள்ளிட்ட எந்தவொரு வாகனத்தையும் ஓட்டினாலும், அவற்றிற்கு கட்டாயமாக காப்பீடு இருக்க வேண்டும். காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்ட விரோதம் மட்டுமல்ல, கடுமையான அபராதத்துக்கும் சிறைத்தண்டனைக்கும் வழிவகுக்கும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

26
அபராதம் சிறை கட்டாயம்

புதிய விதிமுறைகளின் படி, மூன்றாம் தரப்பு காப்பீடு (Third Party Insurance) இல்லாமல் சாலையில் வாகனம் ஓட்டினால் முதன்முறையாக பிடிபட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் அமலாக்கப்படும். சில சந்தர்ப்பங்களில் அபராதத்துடன் சிறைத்தண்டனையும் ஒன்றாக வழங்கப்படும்.

36
ரூ.4000 அபராதம், 3 மாதம் சிறை

இதே தவறை மீண்டும் செய்யும் போது தண்டனை அதிகரிக்கும். மறுமுறை பிடிபட்டால் ரூ.4,000 அபராதமும், மூன்று மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். தற்போது, காப்பீடு இல்லாததால் ஓட்டுநரின் லைசென்ஸ் உடனடியாக ரத்து செய்யப்படுவதில்லை. எனினும், சட்டப்படி அபராதமும் சிறைத்தண்டனையும் தவிர்க்க முடியாது.

46
காப்பீடு கட்டாயம் ஏன்?

இந்த காப்பீட்டின் முக்கியத்துவம், சாலையில் ஏற்படும் விபத்துகளில் மூன்றாம் தரப்பு நபர்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு ஏற்படும் சேதத்திற்கான நஷ்டஈட்டை வழங்குவதில் இருக்கிறது. இன்ஷூரன்ஸ் இல்லாமல் விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு முழுமையாக உங்கள் சொந்த செலவில் வழங்க வேண்டிய நிலை ஏற்படும். பெரும்பாலும் இந்த தொகைகள் லட்சக்கணக்கில் இருக்கும் என்பதால், இது நிதி சுமையாக மாறும் அபாயம் அதிகம்.

56
கம்ப்ரீஹென்சிவ் இன்ஷூரன்ஸ் காப்பாற்றும்

சிறிய செலவில் கிடைக்கும் மூன்றாம் தரப்பு காப்பீடு, வாகன உரிமையாளர்களுக்கும், விபத்தில் பாதிக்கப்படும் நபர்களுக்கும் பாதுகாப்பளிக்கிறது. வாகனத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டுமெனில் கம்ப்ரீஹென்சிவ் இன்ஷூரன்ஸ் (Comprehensive Insurance) எடுக்கலாம்.

66
நிதி சுமையை குறைக்கும் காப்பீடு

போக்குவரத்து துறை அதிகாரிகள், சாலையில் வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் காப்பீட்டினை கட்டாயம் எடுக்க வேண்டும் என்றும் இது சாலை பாதுகாப்புக்கும், சட்டத்திற்கும் அவசியம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும்  இன்ஷூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய நிதி சுமையாக மாறக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories