Cheap Train Tickets
நீங்கள் மலிவாக ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய விரும்பினால், சில வழிமுறைகள் உள்ளன. அதைத் தொடர்ந்து மலிவான ரயில் டிக்கெட்டுகளை எளிதாக பதிவு செய்து உங்கள் பயணத்தை அனுபவிக்கலாம். இந்திய ரயில்வே ஒரு மிகப் பெரிய நெட்வொர்க் ஆகும். அதில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். இப்போது பெரும்பாலான பயணிகள் ஏசி கோச்சில் முன்பதிவு செய்ய விரும்புகிறார்கள்.
Indian Railways
ஆனால் அவர்களின் ரயில் டிக்கெட்டுகள் விலை உயர்ந்தவையாக உள்ளது. இது பாமர மக்களுக்கு ஏற்றவையாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால், மிகக் குறைந்த கட்டணத்தில் ரயில் டிக்கெட்டுகளைப் பெறுவீர்கள். இந்திய ரயில்வேயும் பயணிகளின் வசதிக்காக வெவ்வேறு ஒதுக்கீட்டின் கீழ் ஆன்லைன் முன்பதிவு செய்கிறது.
Railway Train Ticket
இதில் நல்ல விஷயம் என்னவென்றால், இதன் மூலம் ரயில் டிக்கெட் மலிவானதாகிறது. ரயில்வே கோட்டா சில வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மூத்த குடிமக்கள் ஒதுக்கீடு, உயர் அதிகாரி அல்லது தலைமையக ஒதுக்கீடு, வெளிநாட்டு சுற்றுலா ஒதுக்கீடு, பாதுகாப்பு ஒதுக்கீடு, நாடாளுமன்ற வளாக ஒதுக்கீடு, பெண்கள் ஒதுக்கீடு, ஊனமுற்றோர் ஒதுக்கீடு, கடமை அனுமதி ஒதுக்கீடு, சாலை ஓரம் அல்லது தொலைதூர இட ஒதுக்கீடு போன்றவை உள்ளது.