State Bank of India
பாரத ஸ்டேட் வங்கி உங்களுக்கு 75 லட்சம் வரையிலான வீட்டுக் கடனை மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கொடுக்கிறது. 8.5% முதல் 9.85% வட்டியில் கடன் பெறலாம். அதாவது ரூ.1 லட்சம் கடனுக்கான வட்டியாக ஆண்டுக்கு ரூ.8500 முதல் ரூ.9850 வரை செலுத்த வேண்டும்.
Bank of Baroda
பேங்க் ஆப் பரோடாவும் சொந்த வீடு வாங்குபவர்களை ஊக்குவிக்கிறது. 8.40% முதல் 10.90% வரை வட்டியில் வீட்டுக்கடன் வழங்கி வருகிறது.
Union Bank
யூனியன் வங்கியும் வீட்டுக்கடன் பெற நல்ல தேர்வாக இருக்கும். ரூ. 75 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 8.35 முதல் 10.90 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றனர்.
Punjab National Bank
பஞ்சாப் நேஷனல் வங்கியும் வீட்டுக் கடன் கொடுக்கிறது. இந்த வங்கியிலிருந்து வீட்டுக் கடன் பெற 8.40 முதல் 10.15 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.
Bank of India
பஞ்சாப் நேஷனல் வங்கியும் சொந்த வீட்டு வாங்குபவர்களுக்குக் கைகொடுக்கிறது. இந் வங்கியில் வீட்டுக் கடனுக்கு 8.40 முதல் 10.15 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
Canara Bank
கனரா வங்கியும் வீட்டுக் கடன் பெற நல்ல இடம்தான். கனரா வங்கி வீட்டுக் கடனுக்கு 8.40% முதல் 8.40% வரை வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது.
UCO Bank
யூகோ வங்கியும் வீட்டுக் கடன் வழங்குகிறது. இங்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான கடனுக்கு, 8.45% முதல் 8.45% வரை வட்டி பெறப்படுகிறது.
Bank of Maharashtra
மகாராஷ்டிரா வங்கியும் பெரிய அளவில் வீட்டுக் கடன் பிரிவைக் கொண்டுள்ளது. 8.35 முதல் 11.15 சதவீதம் வட்டியில் கடன் கொடுக்கப்படுகிறது.
Punjab & Sind Bank
பஞ்சாப் & சிந்து வங்கியிலும் வீட்டுக் கடன் பெறலாம். இந்த வங்கியில் 8.50 முதல் 10 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது.
Indian Overseas Bank
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்தும் வீட்டுக் கடன் பெறலாம். இந்த வங்கி வீட்டுக் கடனுக்கு 8.40 முதல் 10.60 சதவீதம் வட்டி வசூலிக்கிறது.
Central Bank of India
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவும் வீட்டுக் கடன்களுக்கு குறைவான வட்டிதான் பெறுகிறது. ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கு, 8.45 முதல் 9.80 வரை சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.