சுதந்திர தினம்.. வரலட்சுமி விரதம்.. தமிழ்நாட்டில் தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறையா?

Published : Aug 13, 2024, 11:40 AM ISTUpdated : Aug 13, 2024, 12:02 PM IST

சுதந்திர தினம், வரலட்சுமி விரதம், சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

PREV
16
சுதந்திர தினம்.. வரலட்சுமி விரதம்.. தமிழ்நாட்டில் தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறையா?
Bank Holiday August 2024

நாட்டில் ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துவிட்டது.. அதன்படி, இந்த மாதம் மொத்தம் 13 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் ஆகும்.

26
Bank Holiday August 2024

பொதுவாக, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள்.. இவை தவிர பொது விடுமுறை தினங்கள், பண்டிகைகள் என பல நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எனினும் இந்த விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப மாறுபடும்.

36
Bank Holiday August 2024

இருப்பினும், சுதந்திர தினம் போன்ற தேசிய விடுமுறை நாட்களில், நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். இந்த மாதம் விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு, உங்கள் வங்கி பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவது முக்கியம். இந்த நிலையில் ஆகஸ்ட் 15-ம் தேதி வியாழக்கிழமை சுதந்திர தினம் என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

46
Bank Holiday August 2024

ஆகட்ஸ் 16-ம் தேதி வரலட்சுமி விரதம் வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து வழிபட்டு வேண்டிய வரங்களை பெறுவதே வரலட்சுமி விரதமாகும். வரலட்சுமி விரதம் இருந்தால் வீட்டில் செல்வ வளம், மகிழ்ச்சி பெருகி, கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

56
Bank Holiday August 2024

இந்த வரலட்சுமி விரத நாளில் வங்கிகளுக்கு விடுமுறை என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஆனால் அன்றைய தினம், அதாவது ஆகஸ்ட் 16-ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை இல்லை. அடுத்த நாள் 3-வது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினமும் விடுமுறை இல்லை. ஆகஸ்ட் 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் விடுமுறை ஆகும். 

அதே போல் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 24 4-வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறையாகும். அதே போல் ஆகஸ்ட் 25 ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை. ஆகஸ்ட் 26-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி (குஜராத், ஒடிசா, சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகண்ட், சிக்கிம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், ஜம்மு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

 

66
Bank Holiday August 2024

எனவே அனைத்து வங்கிகளும் ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் தேசிய மற்றும் பிராந்திய விடுமுறை நாட்களில் மூடப்படும். எனவே சிரமத்தைத் தவிர்க்க இந்தத் தேதிகளில் தேவையான வங்கிச் செயல்பாடுகளைத் திட்டமிடுவதை உறுதிசெய்யவும். எனினும் இண்ட்ர்நெட் பேங்கிங், எஸ்.எம்.எஸ் பேங்கிங், இணைய வழி பரிவர்த்தனைகள், ஏடிஎம்கள் ஆகியவை வழக்கம் போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories