கௌதம் அதானியின் வெற்றிக்கு காரணமே இவங்க தான்.. ப்ரீத்தி அதானியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

First Published | Aug 13, 2024, 10:08 AM IST

Priti Adani Net Worth : கௌதம் அதானியின் மனைவி யார் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Priti Adani

இந்தியாவின் 2-வது மிகப்பெரிய கோடீஸ்வரராக கௌதம் அதானி இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ.6,75,000 கோடி என்று கூறப்படுகிறது. அதானி குழுமத்தின் தலைவராக இருக்கும் கௌதம் அதானி குறித்து பல்வேறு தகவல்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அவரின் மனைவி யார் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Priti Adani

கௌதம் அதானியின் மனைவி டாக்டர் பிரீத்தி அதானி. இவர் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றான அதானி அறக்கட்டளையின் தலைவர் ஆவார். அதானி அறக்கட்டளையானது அதானி குழுமத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) பிரிவாக செயல்படுகிறது.

Latest Videos


Priti Adani

நாடு முழுவதும் உள்ள சமூகங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளில் கவனம் செலுத்துகிறது. கல்வி மற்றும் சமூக பொறுப்புணர்வின் அவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், குஜராத் லா சொசைட்டி பல்கலைக்கழகம் டாக்டர் பிரிதி ஜி. அதானிக்கு 2020 இல் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

Priti Adani Networth

யார் இந்த ப்ரீத்தி அதானி?

1965ல் குஜராத்தி குடும்பத்தில் பிறந்தவர் ப்ரீத்தி.. தனது 21-வது வயதில் 1986 இல் கௌதம் அதானியை செய்து கொண்டார், அகமதாபாத்தில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பல் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம் (BDS) பட்டம் பெற்ற ப்ரீ அதானி ஒரு பல் மருத்துவர் ஆவார்.

Priti Adani

ப்ரீத்தி மற்றும் கௌதம் அதானிக்கு கரண் அதானி, ஜீத் அதானி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்: கரண் அதானி, அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ லிமிடெட் (APSEZ) இன் நிர்வாக இயக்குநராக உள்ளார். அதானி குழுமத்தின் நிதித்துறையின் துணைத் தலைவராக ஜீத் அதானி இருக்கிறார்.

ப்ரீத்தி அதானி 1996 இல் அதானி அறக்கட்டளையை நிறுவினார். கல்வி, பொது சுகாதாரம், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிலையான வாழ்வாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதை இந்த அறக்கட்டளை நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்று, அதானி அறக்கட்டளை இந்தியாவில் 18 மாநிலங்களில் 5,753 கிராமங்களில் செயல்படுகிறது.

Priti Adani

கௌதம் அதானி பல முறை தனது மனைவியை பாராட்டி உள்ளார். தனது வெற்றிக்கு பக்கபலமாக ப்ரீத்தி இருந்ததாக அதானி கூறியுள்ளார். இதுகுறித்து ஒருமுறை பேசிய கௌதம் அதானி, “நான் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தியவன். அதேசமயம் ப்ரித்தி, அவர் ஒரு தகுதி வாய்ந்த மருத்துவ பயிற்சியாளர், அவர் ஒரு மருத்துவர். என்னை விட அதிக தகுதி இருந்தும் என்னை திருமணம் செய்து கொள்ள தைரியமான முடிவு எடுத்தார். என் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் எனக் கேட்டால், ப்ரீத்தியைத்தான் சுட்டிக் காட்டுவேன்” என்று கூறினார்..

Priti Adani Networth

ப்ரீத்தி அதானியின் சொத்து மதிப்பு சுமார் $1 பில்லியன் டாலராகும். இந்திய மதிப்பில் ரூ. 8326 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அதானி அறக்கட்டளைக்கு அவர் அளித்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் எண்ணற்ற வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!