இந்திய தொழில் அதிபர் கௌதம் அதானியின் வீடு டெல்லியின் உபேர் பகுதியில் அமைந்துள்ளது. அவரது அரண்மனை போன்று வீட்டில் சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவின் போது, USIBC குளோபல் லீடர்ஷிப் விருதைப் பெற்ற கவுதம் அதானி, சோலார் மாட்யூல்கள், ஹைட்ரஜன் எலக்ட்ரோலைசர்கள் மற்றும் காற்றாலை டர்பைன் தயாரிக்கும் மூன்று Giga தொழிற்சாலைகளை விரைவில் அதானி குழுமம் கட்டும் என்று குறிப்பிட்டார். இந்தத் திட்டம் 2030ம் ஆண்டுக்குள் சுத்தமான எரிசக்திக்கான USD-70 பில்லியன் முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கௌதம் அதானி இந்த அறிவிப்பை வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகு சக தொழிற் போட்டியாளரான கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி ஐந்தாவது ஜிகா தொழிற்சாலை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பணக்காரராக கௌதம் அதானி இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ.6,75,000 கோடி என்று கூறப்படுகிறது. அகமதாபாத்தில் உள்ள கௌதம் அதானி வீட்டின் விலையின் சரியான புள்ளிவிவரங்கள் தெரியவில்லை, ஆனால் நிச்சயமாக அது பல லட்சம் கோடிக்கணக்கில் இருக்கும் என்பதே உண்மை.
கௌதம் அதானிக்கு சொந்தமாக சொகுசு கார்கள் மற்றும் பிரைவேட் ஜெட் விமானங்களும் உள்ளன. அவர் BMW 7 சீரிஸ், லிமோசின், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், சிவப்பு ஃபெராரி கலிபோர்னியா வகை கார்களும் அடங்கும். 2009 பாம்பார்டியர் சேலஞ்சர் 605, 2013 எம்ப்ரேயர் லெகசி 650, ஹாக்கர் 850XP மற்றும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் AW139 ஹெலிகாப்டர் ஆகியவை அடங்கும்.