ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் (EPFO) பெரும்பாலான திட்டங்களைப் பற்றி மக்கள் அறிந்திருக்கிறார்கள். மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் PF தொகை, PF மொத்தத் தொகை, ஓய்வூதியம், அவசரத் தேவைகளுக்காக PF தொகையிலிருந்து பணம் எடுப்பது உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இவைகளை EPFO சீராக நிர்வகித்து வருகிறது.
இவை தவிர, EPFO உறுப்பினர்களுக்கு 7 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு வசதியும் உள்ளது. இதற்கு பிஎஃப் உறுப்பினர்கள் எந்த பிரீமியமும் செலுத்த வேண்டியதில்லை. இந்த திட்டம் ஊழியர்களின் டெபாசிட் லிங்க் இன்சூரன்ஸ் லிமிடெட் (EDLI) கீழ் வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு ரூபாய் கூட பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. இந்தக் காப்பீட்டின் மொத்தத் தொகை, வருங்கால வைப்பு நிதிக்கு நிறுவனம் அல்லது அமைப்பு செலுத்தும் சதவீதத்தின் கீழ் முடிவு செய்யப்படும். இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ், PF உறுப்பினர்கள் அதிகபட்சமாக 7 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெற முடியும்.
ஊழியரின் கடைசி 12 மாத அடிப்படை ஊதியம் மற்றும் படிகளின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் காப்பீட்டுத் தொகையைப் பெறும்போது இறுதி அடிப்படைச் சம்பளத்தின் 35 மடங்கு + அலவன்ஸ் மற்றும் போனஸ் தொகை அதிகபட்சமாக ரூ.1,75,000 வரை வழங்கப்படும். இந்த காப்பீட்டில், அதிகபட்சம் 7 லட்சம் ரூபாய் வரை கவரேஜ் கிடைக்கும்.
சொந்த வீடு கட்டணுமா? இந்த 11 அரசு வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்!
இது PF ஊழியர் ஆயுள் காப்பீடுக்கு வழங்கப்படுகிறது. ஊழியர் இறந்தால், நாமினி இந்தத் தொகையைப் பெறுவார். இந்தத் தொகையைப் பெற, பரிந்துரைக்கப்பட்டவருக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். நாமினி 18 வயதுக்குக் குறைவானவராக இருந்தால், அவருடைய பாதுகாவலர் நாமினி மூலம் இந்தத் தொகையைப் பெற உரிமை உண்டு. க்ளைம் செய்யும் போது PF ஊழியரின் இறப்புச் சான்றிதழ் கட்டாயம் சமர்பிக்கப்பட வேண்டும்.