D-Mart Shopping Secrets: டி-மார்ட் ₹5000 பில் ₹2000 ஆக குறைக்கலாம்... இந்த ட்ரிக்ஸ் தெரிந்தா போதும்!

Published : May 06, 2026, 03:38 PM IST

D-Mart Shopping Secrets : டி-மார்ட்டில் ஷாப்பிங் செய்யும்போது திட்டமிட்டதை விட அதிகமாக செலவு செய்கிறீர்களா? எளிய முறைகள் மூலம் உங்கள் செலவை பாதியாகக் குறைக்கலாம். புத்திசாலித்தனமான தேர்வே உண்மையான சேமிப்பு.

PREV
15
டி-மார்ட் டிப்ஸ்

நடுத்தர மக்களின் ஷாப்பிங் பட்டியலில் முதல் இடம் பிடித்திருப்பது டி-மார்ட். குறைந்த விலை, அதிக தள்ளுபடி, ஒரே இடத்தில் எல்லா பொருட்களும் கிடைப்பது போன்ற காரணங்களால் தினமும் கூட்டம் நிரம்பியிருக்கும். ஆனால் ஒரு சின்ன பிரச்சனை உள்ளது. தேவையில்லாத பொருட்களை கூட வாங்கிவிட்டு, ரூ.2000 திட்டம் ரூ.5000 ஆக மாறிவிடுகிறது. இதை கட்டுப்படுத்த சில எளிய ட்ரிக்ஸ் உதவும்.

25
டி-மார்ட்டுக்கு குவியும் வரவேற்பு

டி-மார்ட்-இன் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் விலை கொள்கை. ஒரே பொருள் பல பிராண்டுகளில் கிடைப்பதால், வாடிக்கையாளர்களுக்கு தேர்வு சுதந்திரம் உள்ளது. மளிகை முதல் உடைகள் வரை அனைத்தும் ஒரே கூரையின் கீழ் வாங்க முடிவதும் கூடுதல் வசதி. இதனால் மக்கள் அதிகமாக இங்கு திரளுகின்றனர்.

35
ஷாப்பிங் டிப்ஸ்

ஷாப்பிங் செல்லும் முன் தேவையான பொருட்களின் பட்டியலை எழுதுவது மிக முக்கியம். இந்த பட்டியல் உங்கள் செலவைக் கட்டுப்படுத்தும் கம்பி வேலியாக செயல்படும். ஷெல்ஃப்களில் அழகாக அடுக்கப்பட்ட பொருட்களை பார்த்து கவரப்படாமல், பட்டியலில் உள்ளவற்றை மட்டுமே தேர்வு செய்தால், தேவையற்ற செலவுகள் தானாகவே குறையும்.

45
தினசரி சலுகைகள்

பல பெரிய பிராண்டுகள் அதிக விலையில் கிடைக்கும். ஆனால் அதே தரத்தில் இருக்கும் குறைந்த விலை பொருட்கள் அல்லது டி-மார்ட்-ல் சொந்த பிராண்டுகளை தேர்வு செய்தால் 30% முதல் 40% வரை சேமிக்க முடியும். தினசரி பயன்பாட்டு பொருட்களில் இந்த மாற்றம் பெரிய வித்தியாசத்தை உருவாக்கும்.

55
டி-மார்ட் ஆஃபர்கள்

‘Buy One Get One’ போன்ற ஆஃபர்களை சரியாகப் பயன்படுத்தினால், உங்கள் மொத்த செலவு குறையும். குறிப்பாக சோப்பு, ஷாம்பு, பருப்பு போன்ற பொருட்களில் இந்த சலுகைகள் அதிகம். மேலும், விலையுயர்ந்த பொருட்கள் கண் அளவிலான ஷெல்ஃப்களில் வைக்கப்படும். அதே நேரத்தில் குறைந்த விலை பொருட்கள் மேலோ அல்லது கீழோ இருக்கும். அவற்றை கவனித்தால் கூடுதல் சேமிப்பு சாத்தியம். சுருக்கமாகச் சொன்னால், திட்டமிட்டு ஷாப்பிங் செய்தால் ரூ.5000 செலவைக் கூட ரூ.2000-ரூ.2500க்குள் கட்டுப்படுத்த முடியும். புத்திசாலித்தனமான தேர்வே உண்மையான சேமிப்பு.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories