தங்க இ.டி.எஃப்களில் (Gold ETFs) முதலீடு செய்யும் ‘கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸ்’ (Gold FoFs) திட்டங்களில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்குப் பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிரடிக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
தங்க இ.டி.எஃப்களில் (Gold ETFs) முதலீடு செய்யும் ‘கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸ்’ (Gold FoFs) திட்டங்களில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிரடிக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
கோல்டு இ.டி.எஃப் (Gold ETF): முதலீட்டாளர்கள் தங்களின் பணத்தை நேரடியாக ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தங்க யூனிட்டுகளில் முதலீடு செய்யும் முறையாகும். கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸ் (Gold FoFs): முதலீட்டாளர்கள் நேரடியாகத் தங்க யூனிட்டுகளில் முதலீடு செய்யாமல், பணத்தை சொத்து மேலாண்மை நிறுவனங்களிடம் (AMC) வழங்குவர். அந்த நிறுவனங்கள் சந்தையில் சிறப்பாக வர்த்தகமாகும் பல்வேறு கோல்டு இ.டி.எஃப்களில் முதலீடு செய்யும்.
பொது முதலீட்டாளர்களுக்கு எந்தக் கோல்டு இ.டி.எஃப் சிறப்பாகச் செயல்படுகிறது என்ற நேரடித் தெளிவு குறைவாக உள்ள சூழலில், சந்தை நிலவரத்தை நன்கு அறிந்த சொத்து மேலாண்மை நிறுவனங்கள் வழியே பெருமுதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வந்தனர். தற்போது அந்த முதலீடுகளுக்கே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
24
அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள் என்ன?
அக்டோபர் 16 முதல் கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸ் திட்டங்களில் திய மொத்த முதலீடுகளை (Lumpsum) செய்ய முடியாது. புதிய முறையான முதலீட்டுத் திட்டங்களை (SIP) தொடங்க முடியாது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள எஸ்.ஐ.பிக்களில் முதலீட்டுத் தொகையை அதிகரிக்க (Step-up) முடியாது.
யாருக்கு விதிவிலக்கு?
ஏற்கனவே கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருபவர்கள் எந்தவிதத் தடையுமின்றி தங்களது முதலீட்டைத் தொடரலாம். இந்தக் கட்டுப்பாடுகள் ‘கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸ்’ திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்; நேரடி ‘கோல்டு இ.டி.எஃப்’களுக்குப் பொருந்தாது. எனவே, முதலீட்டாளர்கள் கோல்டு இ.டி.எஃப்களில் புதிய எஸ்.ஐ.பியைத் தொடங்கவோ, ஏற்கனவே உள்ள எஸ்.ஐ.பிகளைத் தொடரவோ எந்தத் தடையும் இல்லை.
34
கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள 17 நிறுவனங்கள்
ஹெச்டிஎஃப்சி (HDFC Mutual Fund), ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் (ICICI Prudential Mutual Fund), டாடா (Tata Mutual Fund), கோட்டக் மஹிந்திரா (Kotak Mahindra Mutual Fund), ஆக்ஸிஸ் (Axis Mutual Fund) உட்பட 17 முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
கட்டுப்பாடுகளுக்கான பின்னணி என்ன?
முதலீட்டாளர்கள் கோல்டு இ.டி.எஃப்களில் முதலீடு செய்யும்போது, அது டிஜிட்டல் முதலீடாக அமைந்தாலும், அதற்கு இணையான உண்மையான தங்கத்தை (Physical Gold) சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். இது கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸுக்கும் பொருந்தும். ஏற்கனவே தங்க இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் பொதுமக்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்ததும், தங்கம் மற்றும் வெள்ளிக்கான சுங்க வரியை மத்திய அரசு 15 சதவீதமாக உயர்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
தற்போதும் அதே நோக்கத்திற்காகவே இந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பண்டிகைக் காலம் என்பதால் மக்களிடையே தங்க முதலீடு பெருமளவில் குவியும் வாய்ப்புள்ளது. முதலீடுகள் அதிகரிக்கும் போது, அதற்கு இணையாக நிறுவனங்கள் அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.
இந்திய ரூபாயின் மதிப்பு தற்போதுதான் ஓரளவு வலுவடைந்து வருகிறது. இந்தச் சூழலில் இறக்குமதிக்காக அதிக அளவிலான அமெரிக்க டாலர்கள் வெளியேறினால், இந்திய ரூபாயின் மதிப்பு வலுவிழக்கும் அபாயம் உள்ளதுடன், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் குறையும். இவற்றை கருத்தில் கொண்டே, இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) வழிகாட்டுதலின்படி சொத்து மேலாண்மை நிறுவனங்கள் இந்த நடைமுறையைக் கொண்டுவந்துள்ளன.
இப்புதிய கட்டுப்பாடுகளால் பெருமுதலீட்டாளர்களும், கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸ் மூலம் புதிதாக முதலீடு செய்யத் திட்டமிடுபவர்களும் மட்டுமே பாதிக்கப்படுவார்கள். மாறாக, நேரடி கோல்டு இ.டி.எஃப்களில் ஏற்கனவே எஸ்.ஐ.பி வைத்திருப்பவர்களுக்கும், புதிதாக கோல்டு இ.டி.எஃப்களில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.