7வது ஊதியக் குழுவின் Pay Matrix-இல் மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 நிலைகள் உள்ளன. ஊழியரின் பதவி மற்றும் சம்பள நிலைக்கு ஏற்ப அவருக்கான Pay Level தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிலைக்கும் குறிப்பிட்ட அடிப்படைச் சம்பள வரம்பும், ஆண்டுதோறும் சம்பள உயர்வு பெறுவதற்கான அடுத்தடுத்த நிலைகளும் உள்ளன.
Fitment Factor என்பது பழைய அடிப்படைச் சம்பளத்தைப் புதிய அடிப்படைச் சம்பளமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் பெருக்கல் எண். 7வது ஊதியக் குழுவில் 2.57 என்ற Fitment Factor பயன்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.7,000-லிருந்து ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
உதாரணமாக, 8வது ஊதியக் குழுவில் ஒரு கற்பனையான 2.00 Fitment Factor ஏற்றுக்கொள்ளப்பட்டால், தற்போதைய ரூ.18,000 அடிப்படைச் சம்பளம் ரூ.36,000 ஆகக் கணக்கிடப்படும். ஆனால், இது விளக்கத்திற்காக மட்டுமே கொடுக்கப்பட்ட உதாரணம். 8வது ஊதியக் குழு எந்த Fitment Factor-ஐப் பரிந்துரைக்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. மேலும், அடிப்படைச் சம்பளத்தில் ஏற்படும் மாற்றத்தையும் மொத்தச் சம்பள உயர்வையும் ஒன்றாகக் கருதக் கூடாது.
இதையும் படிங்க : EPFO Scheme : சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! யாருக்குக் கிடைக்கும்? என்ன தகுதி?