உங்களிடம் ஏதேனும் சிறப்புத் திறமைகள் இருந்தாலும், அவற்றின் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரித்து, நிதி நிலையை மேம்படுத்திக்கொள்ளலாம்.
1. எழுதுதல், திருத்துதல்: உங்களுக்கு எழுதுவதிலோ அல்லது பிழைகளைச் சரிசெய்வதிலோ திறமை இருந்தால், உங்களுக்கு ஃப்ரீலான்சிங் வேலை கிடைத்தது போலத்தான். வலைப்பதிவு எழுதுதல், கதைகள் எழுதுதல், அல்லது எந்தவொரு வலைத்தளத்திலும் உள்ளடக்கம் எழுதுதல், நகல் எழுதுதல் அல்லது பிழைத்திருத்தம் செய்யும் வேலைகள் எளிதாகக் கிடைக்கும்.
2. கிராஃபிக் வடிவமைப்பு: லோகோ வடிவமைப்பு, பிரசுர வடிவமைப்பு, சமூக ஊடக கிராபிக்ஸ்
3. வலைத்தள வடிவமைப்பு: சிறிய நிறுவனங்களுக்கு வலைத்தளங்களை வடிவமைக்கலாம். ஏற்கனவே உள்ள தளங்களை மாற்றியமைக்கும் வாய்ப்பும் உள்ளது. வாய்ப்புகள் அதிகம். உழைப்பு குறைவு, லாபம் அதிகம்.
4. சமூக ஊடக மேலாண்மை: சிறிய வணிகங்கள் மற்றும் பிரபலங்களுக்கான சமூக ஊடகக் கணக்குகளை நிர்வகித்தல்.
5. தரவு உள்ளீடு (Data Entry): இது மிகக் குறைந்த திறன்கள் தேவைப்படும் ஒரு எளிய வேலை.
6. மொழிபெயர்ப்பு: உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்தால் மொழி பெயர்ப்பு துறையை தேர்ந்தெடுக்கலாம்.