கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - முழு விபரம் உள்ளே

Published : Dec 14, 2025, 10:57 AM IST

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு, இந்திய ரயில்வேயின் தென் மேற்கு மற்றும் தென் ரயில்வே மண்டலங்கள் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளன. சில ரயில்களின் சேவைகளிலும் மாற்றங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

PREV
16
சிறப்பு ரயில் இயக்கம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே சார்பில் பல சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தென் மேற்கு ரயில்வே மற்றும் தென் ரயில்வே ஆகிய இரு மண்டலங்களும், பண்டிகை கால கூட்டத்தை சமாளிக்கும் வகையில் கூடுதல் சேவைகள் அறிமுகம் செய்துள்ளன. இதனால், நீண்ட தூர பயணிகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

26
தென் மேற்கு ரயில்வே

தென் மேற்கு ரயில்வே அறிவிப்பின்படி, ஹுப்ளி - யஷ்வந்த்பூர் - விஜயபுரா வழித்தடத்தில் டிசம்பர் 24 அன்று ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும். ரயில் எண் 07379, டிசம்பர் 24 மதியம் 12 மணிக்கு ஹுப்ளியில் இருந்து புறப்பட்டு, ஹவேரி, ஹரிஹர், தவணகெரே, அர்சிகேரே, தும்கூர் வழியாக இரவு 8.30 மணிக்கு யஷ்வந்த்பூரை அடையும். அதனைத் தொடர்ந்து, ரயில் எண் 06277, யஷ்வந்த்பூரில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு விஜயபுராவை சென்றடையும்.

36
கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்

இதே நேரத்தில், தும்கூர் - மல்லசந்திரா இடையே நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. மேற்கு ரயில்வே தெரிவித்தார். டிசம்பர் 17, 20, 21 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சில MEMU மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றியமைத்து இயக்கப்படும்.

46
புத்தாண்டு சிறப்பு ரயில்

இதன் ஒரு பகுதி, பெங்களூரு – தும்கூர் MEMU, தர்வாட் – பெங்களூரு எக்ஸ்பிரஸ், தலகுப்பா – பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் அர்சிகேரே அல்லது டோடபெலே நிலையங்களில் நிறுத்தப்படவோ, அங்கிருந்து புறப்படவோ செய்யப்படும். மேலும், சாமராஜநகர் – தும்கூர் பாசஞ்சர் ரயிலும் சில நாட்களில் சிக்கபனாவரத்தில் நிறுத்தப்படும்.

56
பண்டிகை கால ரயில்

மேலும், சிக்கமகளூர் – யஷ்வந்த்பூர், யஷ்வந்த்பூர் – சிக்கமகளூர் மற்றும் பெங்களூரு – மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் டிசம்பர் 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, தென் ரயில்வே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு வதோதரா - கோட்டயம் இடையே சிறப்பு ரயிலையும் அறிவித்துள்ளது.

66
இந்திய ரயில்வே

ரயில் எண் 09124, டிசம்பர் 20 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் வதோதராவிலிருந்து இயக்கப்படும். திரும்பிச் செல்லும் 09123 ரயில், டிசம்பர் 21 முதல் ஜனவரி 11 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கோட்டயத்திலிருந்து புறப்படும். மேலும், ஜனவரி மாதத்தில் மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளதாக தென் ரயில்வே தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories