இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. நாடு முழுவதும் தினமும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் இதில் பயணம் செய்து வருகின்றனர்.
மிகவும் வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் மக்கள் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். இந்தியாவில் பல்வேறு வகையான ரயில்கள் இயக்கபபட்டு வரும் நிலையில், அதிவேகமாக செல்லும் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது.
24
சென்னை-டெல்லி வந்தே பாரத் ரயில்
இந்த வரிசையில் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. மற்ற ரயில்களை விட அதிவேகமாக செல்வதாலும், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு முன்கூட்டியே செல்ல முடியும் என்பதாலும் இந்த ரயில்களில் இருக்கைகள் முழுவதும் நிரம்பி இடம் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து டெல்லிக்கு நேரடியாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
26 மணி நேரத்தில் டெல்லி செல்லலாம்
சென்னையில் இருந்து டெல்லிக்கு நேரடியாக வந்தே பாரத் ரயில் ஏதுமில்லை. இப்போது சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 32 மணி நேரம் பயணிக்கிறது. மேலும் சென்னையில் இருந்து இயக்கப்படும் நிஜாமுதின் துரந்தோ எக்ஸ்பிரஸ் டெல்லியை 28 மணி நேரம் 5 நிமிடத்தில் சென்றடைகிறது. அதே வேளையில் சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் 26 மணி நேரத்தில் டெல்லி சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
34
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 32 மணி நேரம் டெல்லியை சென்றடையும் நிலையில், வந்தே பாரத் ரயில் 26 மணி நேரத்தில் இயக்கப்பட்டால 6 மணி நேரம் பயண நேரம் மிச்சமாகும். சென்னை டூ டெல்லி வந்தே பாரத் ரயிலை இருக்கை அல்லாமல் ஸ்லீப்பர் ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட உள்ளது. ஆகையால் சென்னை டூ டெல்லி இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்க்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ரயிலில் ஸ்லீப்பர் மட்டுமின்றி உட்காரும் வசதியும் இடம்பெற்றிருக்கும்.
இந்த ரயிலில் ஏசி சேர் காரில் 1,805 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் 3,355 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படலாம். சென்னை-டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விஜயவாடா, நாக்பூர், போபால் சந்திப்பு, ஜான்சி சந்திப்பு, குவாலியர் சந்திப்பு என முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் நிற்கலாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என பயணிகள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.