செப்டம்பர் மாதம் பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. வங்கி சேவைகள், அரசு திட்டங்கள், வரி தாக்கல், அஞ்சல் சேவை உள்ளிட்ட பல துறைகளில் இந்த மாற்றங்கள் உங்கள் பணப்பையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
செப்டம்பர் மாதம் துவங்கியுள்ளதால், வழக்கம்போல இந்த மாதத்தின் முதல் நாளிலிருந்து பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. வங்கி சேவைகள், அரசு திட்டங்கள், வரி தாக்கல், அஞ்சல் சேவை உள்ளிட்ட பல துறைகளில் இந்த மாற்றங்கள் உங்களின் பணப்பையில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.
27
எஸ்பிஐ
முதல் மாற்றம் எஸ்பிஐ கிரெடிட் கார்டு விதிகளில். நாட்டின் அரசு வங்கியான எஸ்பிஐ, செப்டம்பர் 1 முதல் தனது சில கிரெடிட் கார்டுகளுக்கான ரிவார்ட்ஸ் பைண்ட்ஸ் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி டிஜிட்டல் கேமிங், அரசு இணையதளங்கள் மற்றும் வணிக தளங்களில் செலவழிப்பதற்கு ரிவார்ட்ஸ் பாயிண்ட்கள் வழங்கப்படாது.
37
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) உள்ளவர்கள், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) தேர்வு செய்யும் கடைசி தேதி செப்டம்பர் 30 ஆக. நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30ல் இருந்த முந்தைய காலக்கெடு நீட்டிக்கப்பட்டதால், இன்று சில வாரங்களில் ஊழியர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கணக்கு தணிக்கை தேவையில்லாத வரி செலுத்துவோருக்கு, இந்த ஆண்டு ஜூலை வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 30 முதல் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 46 நாட்கள் கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது. ஆனால், கணக்கு தணிக்கை தேவையானவர்களுக்கு கடைசி தேதி அக்டோபர் 31 ஆக இருக்கும்.
57
அஞ்சல் துறை
இந்திய அஞ்சல் துறை, செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவையை விரைவு அஞ்சலுடன் இணைத்துள்ளது. இனி பதிவு அஞ்சல் தனி சேவையாக இருக்காது. நாட்டிற்குள் அனுப்பப்படும் அனைத்து அஞ்சல்களும் விரைவு அஞ்சல் மூலமாகவே அனுப்பப்படும்.
67
ஆதார்
UIDAI மக்கள் தங்கள் ஆதார் விவரங்களை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிக்க செப்டம்பர் 14, 2024 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. முகவரி மற்றும் அடையாள ஆவணங்களை பதிவேற்றம் செய்து எளிதாக புதுப்பிக்கலாம்.
77
நிரந்தர வைப்பு திட்டம்
இந்தியன் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி சில சிறப்பு நிரந்தர வைப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியன் வங்கியின் 444 நாள், 555 நாள் திட்டங்களிலும், IDBI வங்கியின் 444, 555, 700 நாள் திட்டங்களிலும் முதலீடு செய்யும் கடைசி தேதி செப்டம்பர் 30, 2025 ஆகும்.