சென்னை டூ டெல்லி வெறும் 24 மணி நேரம் டிராவல்.. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ரெடி.. பயணிகள் குஷி!

Published : Mar 22, 2026, 09:27 PM IST

சென்னை டூ டெல்லி இடையே வெறும் 24 மணி நேரத்தில் செல்லும் வகையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
வந்தே பாரத் ரயில்கள்

இந்தியாவில் தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். நாட்டில் தினமும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. சாதாரண பயணிகள் ரயில் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரை இயக்கப்படுகின்றன. அதுவும் இந்திய ரயில்வேயின் மகுடத்தில் மற்றொரு வைரமாக வந்தே பாரத் ரயில்கள் உருவெடுத்துள்ளன.

24
சென்னை டூ டெல்லி வந்தே பாரத் ஸ்லீப்பர்

இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. முதலில் அமர்ந்து செல்லும் வசதியுடன் மட்டுமே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள், நீண்ட தூரப் பயணங்களுக்காகப் படுக்கை வசதிகளுடன் உருவாகி விட்டது. அந்த வகையில், சென்னை - டெல்லி இடையேயான பயண நேரத்தைப் பெருமளவு குறைக்கும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

34
24 மணி நேரத்தில் டெல்லி செல்லலாம்

தற்போது சென்னையில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 32 மணி நேரம் செல்கிறது. சென்னையில் இருந்து டெல்லி செல்லும் நிஜாமுதின் துரந்தோ எக்ஸ்பிரஸ் 28 மணி நேரம் 5 நிமிடங்கள் பயணம் செய்கிறது. ஆனால் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் விடப்பட்டால் வெறும் 24 முதல் 26 மணி நேரத்திற்குள் டெல்லியைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பயணிகளுக்குக் குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் வரை மிச்சமாகும்.

44
முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் நிற்கும்

சென்னை டூ டெல்லி வந்தே பாரத் ரயில் விஜயவாடா, நாக்பூர், போபால் சந்திப்பு, ஜான்சி சந்திப்பு, குவாலியர் சந்திப்பு என முக்கியமான நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என தகவல்கள் கூறுகின்றன. வழக்கமான ஸ்லீப்பர் ரயில்களைப் போலன்றி, வந்தே பாரத் ரயிலில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய படுக்கை வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஹவுரா - குவஹாத்தி வழித்தடத்தைத் தொடர்ந்து, தென்னிந்தியாவின் முக்கிய வழித்தடமான சென்னை - டெல்லிக்கும் இந்த ரயில் விரைவில் அறிவிக்கப்படலாம் என்பதால் பயணிகள் குஷியாக உள்ளனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories