பெட்ரோல், டீசல் விலை ஏறுது.. பணத்தை மிச்சப்படுத்த இந்த 'டிப்ஸ்' பாலோ பண்ணுங்க!

Published : Mar 22, 2026, 08:10 PM IST

Petrol Diesel Price Hike Fuel Saving Tips: சொந்த வாகனங்களுக்குப் பதிலாக பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தலாம். இது உங்கள் எரிபொருள் செலவைக் குறைக்க உதவும். 

PREV
14
பெட்ரோல், டீசல் விலை

உலகளவில் பெரும் போர் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானை தாக்கி வருகின்றன. ஈரான் இஸ்ரேலையும், வளைகுடா நாடுகளையும் தாக்கி வருகிறது. இந்த நாடுகளில் நடக்கும் போரால் இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹோட்டகள் மூடப்பட்டு வருகின்றன. வீடுகளிலும் சிலிண்டர் விநியோகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. பிரிமீயம் பெட்ரோல் விலையும் உயர்ந்துள்ளது.

24
வொர்க் ஃப்ரம் ஹோம் முறை

தொடர்ந்து ஏறிவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கவலையில் உள்ளனர். இந்த சூழலில், எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கவும், பணத்தை மிச்சப்படுத்தவும் சில சூப்பர் டிப்ஸ்களை பாலோ பண்னுங்க. அதாவது வண்டியின் வேகத்தைக் குறைப்பது, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது போன்றவை இதில் அடங்கும். நடந்து வரும் போரின் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், 'வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையைக் குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

34
வாகனங்களின் வேகத்தை குறைத்தல்

ஒரு நிறுவனம் 10 அம்ச திட்டத்தை பரிந்துரைத்துள்ளது. அதன்படி, வாரத்தில் 3 நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்தால், காரின் எரிபொருள் பயன்பாட்டை 6% வரை குறைக்க முடியும். வாகனங்களின் வேகத்தை மணிக்கு 10 கி.மீ குறைத்தால், எரிபொருளை கணிசமாக சேமிக்கலாம். இது கார்கள், வேன்கள் மற்றும் டிரக்குகளின் மைலேஜை அதிகரிக்கும்.

44
எரிபொருள் செலவு குறையும்

சொந்த வாகனங்களுக்குப் பதிலாக பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தலாம். இது உங்கள் எரிபொருள் செலவைக் குறைக்க உதவும். பெரிய நகரங்களில், நம்பர் பிளேட் சுழற்சி முறை போன்ற திட்டங்கள் மூலம் தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைக்கலாம். இது போக்குவரத்து நெரிசலையும் எரிபொருள் தேவையையும் குறைக்கும். கார் ஷேரிங் மற்றும் 'ஈக்கோ டிரைவிங்' முறைகளைப் பின்பற்றுவது எரிபொருளைச் சேமிக்க உதவும். ஒரே காரில் பலர் பயணம் செய்வதால், எரிபொருள் செலவு குறையும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories