கேஷ்பேக் vs ரிவாட்ஸ்... எந்த கிரெடிட் கார்டு வாங்குவது சிறந்தது?

First Published | Dec 17, 2024, 3:53 PM IST

Credit cards: கேஷ்பேக் அல்லது ரிவார்டு கிரெடிட் கார்டு இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்று யோசிக்கிறீர்களா? உங்கள் செலவுப் பழக்கம், நிதி இலக்குகள் மற்றும் பலன்களைப் பொறுத்து எந்த கிரெடிட் கார்டை பெறுவது சரியாக இருக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Cashback Credit cards

கேஷ்பேக் கிரெடிட் கார்டுகள் என்றால் என்ன?

கேஷ்பேக் கிரெடிட் கார்டுகள் உங்கள் செலவில் ஒரு சதவீதத்தை பணமாகப் பெற உங்களை அனுமதிக்கின்றன. கேஷ்பேக் பொதுவாக உங்கள் கணக்கில் ஸ்டேட்மென்ட் கிரெடிட், நேரடி டெபாசிட் அல்லது காசோலையாகக் கிடைக்கும்.

எளிமையை விரும்புபவர்கள், உடனடி நிதி பலன்களை விரும்புபவர்கள் இதைத் தேர்வு செய்யலாம். எடுத்துக்காட்டுக்கு, 2% கேஷ்பேக் கார்டு ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 2 ரூபாய் கேஷ்பேக் வழங்கும்.

Cashback Credit Card Benefits

கேஷ்பேக் கிரெடிட் கார்டுகளின் நன்மைகள்:

சிக்கலான பாயிண்டுகள் பற்றிய கவலை இல்லை; நீங்கள் தெளிவாக ஒரு குறிப்பிட்ட சதவீதம் தொகையைத் திரும்பப் பெறுவீர்கள். உங்கள் நிலுவைத் தொகையை செலுத்துவது உட்பட எதற்கும் கேஷ்பேக்கைப் பயன்படுத்தலாம்.

அன்றாட செலவுகளுக்கு ஏற்றது.  மளிகை சாமான்கள், பில்கள் மற்றும் எரிபொருள செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.

Tap to resize

Cashback Credit Card drawbacks

கேஷ்பேக் கிரெடிட் கார்டுகளின் குறைகள்:

கேஷ்பேக் கிரெடிட் கார்டுகள் குறைந்த வருவாய் திறன் கொண்டவை. ரிவார்டு புள்ளிகளுடன் ஒப்பிடும்போது கேஷ்பேக் விகிதங்கள் குறைவாக இருக்கலாம்.

வரையறுக்கப்பட்ட போனஸ்கள்:  கேஷ்பேக் கார்டுகளில் பெரும்பாலும் பயணப் பலன்கள் போன்ற பிரீமியம் சலுகைகள் இருக்காது.

Reward Credit Cards

ரிவார்டு கிரெடிட் கார்டு என்றால் என்ன?

ரிவார்டு கிரெடிட் கார்டுகள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் புள்ளிகள், மைல்கள் அல்லது பிற வெகுமதிகளை வழங்குகின்றன. இந்தப் புள்ளிகளை பயணம், ஷாப்பிங், உணவு அல்லது பிற தேவைகளுக்குச் செலவழிக்கலாம்.

இது அதிக சலுகைகளை விரும்புவோருக்கு ஏற்றது. எடுத்துக்காட்டுக்கு, செலவழித்த ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 1 புள்ளியைப் பெறலாம். பயணத்தின்போது ஒவ்வொரு புள்ளியையும் 0.50 பைசாவுக்கு இணையான பலனைக் கொடுக்கும்.

Reward Credit Card Benefits

ரிவார்டு கிரெடிட் கார்டுகளின் நன்மைகள்:

பயணம், ஷாப்பிங், பரிசுகள் போன்ற பிரத்தியேக தேவைகளுக்கு ரிவார்டு புள்ளிகளைப் பயன்படுத்தலாம். பயணம் அல்லது பிரீமியம் ரிவார்டுகளுக்காக ரிவார்டு புள்ளிகள் பெரும்பாலும் அதிக மதிப்பைக் கொண்டிருக்கும்.

பல கார்டுகள் லவுஞ்ச் வசதி, பயணக் காப்பீடு, வரவேற்பு சேவைகள் போன்ற பிரீமியம் சலுகைகளை வழங்குகின்றன.

Reward Credit Card drawbacks

ரிவார்டு கிரெடிட் கார்டுகளின் குறைபாடுகள்:

ரிவார்டு புள்ளிகளின் மதிப்புகளைப் புரிந்துகொள்வது சற்று சிக்கலாக இருக்கலாம். சில ரிவார்டு திட்டங்கள் குறிப்பிட்ட தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். அதற்கும் பயன்படுத்தவில்லை என்றால் காலாவதி ஆகிவிடும்.

ரிவார்டு பாயிண்டுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட சில வகைகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

How to choose suitable credit card?

சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்வது எப்படி?

மளிகைப் பொருட்கள், எரிபொருள் மற்றும் பில்களுக்கு நீங்கள் அதிகமாகச் செலவழித்தால், கேஷ்பேக் கார்டு உங்களுக்குச் சரியாக இருக்கலாம். அடிக்கடி விமானத்தில் பயணம் செய்பவராகவோ அல்லது ஹோட்டல்களில் தங்குபவராக இருந்தாலோ பயணப் பலன்களுடன் கூடிய ரிவார்டு கிரெடிட் கார்டு மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும்.

சிக்கலான ரிவார்டு பாயிண்டுகளை விரும்பவில்லை என்றால், கேஷ்பேக் கார்டு சிறந்தது. அதிகபட்ச பலன்களைப் பெற வேண்டும் என்று நினைத்தால், ரிவார்டு கார்டு ஏற்றதாக இருக்கும்.

Credit Card Offers

கட்டணம் மற்றும் கூடுதல் சலுகைகள்:

கேஷ்பேக் கார்டுகள் பெரும்பாலும் குறைவான அல்லது வருடாந்திர கட்டணங்கள் இல்லாமலே கிடைக்கும். எனவே இது மிதமான செலவு செய்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். ரிவார்டு கார்டுகளுக்கு அதிக கட்டணங்கள் இருக்கலாம். அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு கட்டணத்துக்கு ஏற்ப பிரீமியம் சலுகைகள் கிடைக்கும்.

கேஷ்பேக் கார்டுகள் நேரடி சேமிப்பில் கவனம் செலுத்துகின்றன. ரிவார்டு கிரெடிட் கார்டுகளில் பெரும்பாலும் பயணச் சலுகைகள், காப்பீடு மற்றும் பிரத்தியேக நிகழ்வுகளுக்கான அணுகல் ஆகியவை அடங்கும்.

Latest Videos

click me!