Credit Score Tips
உங்கள் கிரெடிட் ஸ்கோர் உங்கள் நிதிப் பழக்கவழக்கங்களின் பிரதிபலிப்பாகும். ஆனால் நீங்கள் திருமணம் செய்துகொண்டதும், கூட்டுக் கிரெடிட் கணக்கிற்குச் மாறினாலோ, கடனை ஒருங்கிணைத்தாலோ உங்கள் வாழ்க்கைத் துணையின் கிரெடிட் ஸ்கோர் உங்கள் ஸ்கோருடன் இணைக்கப்படும்.
இதனால் ஒருவரின் நிதி சார்ந்த முடிவுகள் இன்னொருவரின் கிரெடிட் ஸ்கோரில் தாக்கம் செலுத்தும். திருமணத்திற்குப் பின் கிரெடிட் ஸ்கோரை நல்ல நிலையில் பராமரிக்க சில வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.
Credit Score Tips
ஒரு தம்பதி, வீட்டுக் கடன் போன்ற தேவைகளை முன்னிட்டு கூட்டு கடன் கணக்குகளைத் திறக்கும்போது, அவர்கள் இணைந்து கையொப்பம் இடவேண்டும். இந்த நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இருவருக்கும் சமமான பொறுப்பு உள்ளது.
Credit Score Tips
பொதுவாக, இருவரும் ஒன்றாக கடனுக்கு விண்ணப்பிக்கும்போது அவர்களின் கிரெடிட் ஸ்கோர் கருத்தில் கொள்ளப்படும். தம்பதியில் ஒருவருக்கு குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும், கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வழிவகுக்கும். அல்லது கடன் ஒப்புதலுக்கான வாய்ப்பும் குறையலாம்.
Credit Score Tips
இருவரும் வலுவான கடன் வரலாறுகளைக் கொண்டிருப்பதை உறுதிசெய்வது, கடன் ஒப்புதல் கிடைப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதோடு, சிறந்த வட்டி விகிதங்களைப் பெறவும் உதவியாக இருக்கும்.
Credit Score Tips
வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் கிரெடிட் ஸ்கோர் மற்றும் சுயவிவரத்தையும் பார்க்கின்றன. கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இருவரின் பங்களிப்பு விகிதத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.
Credit Score Tips
உதாரணமாக, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஒருவரின் பங்கு 60 சதவீதமாக இருந்தால், அவரது கிரெடிட் ஸ்கோருக்கு அதிக வெயிட்டேஜ் இருக்கும். மாறாக, பங்களிப்பு 25 சதவீதமாக இருந்தால், மோசமான கிரெடிட் ஸ்கோரின் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும்.
Credit Score Tips
கூட்டு கடன் கணக்குகள் கடன் பயன்பாட்டு விகிதங்களையும் பாதிக்கலாம். அனைத்து கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு நிலுவைகளைப் பொறுத்து இது மாறுபடும். குறைந்த கடன் பயன்பாட்டு விகிதம் பொறுப்பான கடன் நடத்தையைக் குறிக்கிறது. மாறாக, இந்த விகிதம் அதிகமாக இருந்தால், அது கடன் மற்றும் நிதி அழுத்தத்தில் இருப்பதைக் குறிக்கும். இருவரில் ஒருவருக்கு அதிக கடன் பயன்பாட்டு விகிதம் இருந்தாலும், அது இன்னொருவரின் கிரெடிட் ஸ்கோருக்கு எதிர்மறையாக இருக்கலாம்.
Credit Score Tips
தம்பதிகள் கூட்டுக் கடனுக்காக விண்ணப்பிக்கும்போது, கடன் வழங்கும் நிறுவன அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை செய்யலாம். இது இரண்டு பேரின் கிரெடிட் ஸ்கோரையும் தற்காலிகமாகக் குறைக்கலாம்.
திருமணத்தின் மூலம் பெரும்பாலும் நிதி ஒன்றிணைப்பும் நடக்கிறது. இது கடன் ஒருங்கிணைப்புக்கும் வழிவகுக்கும். இதை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கும்.
Credit Score Tips
கூட்டுக் கடனை நிர்வகிக்க நிதி இலக்குகள் மற்றும் கடன் பழக்கவழக்கங்கள் பற்றி வெளிப்படையாக இருப்பது அவசியம். சேமிப்பு, கடனை அடைத்தல் போன்ற தனிப்பட்ட நிதி நோக்கங்களை விவாதித்து முடிவுசெய்வது நல்லது. கடந்த கால தவறுகள், கடன் வரலாறு பற்றிய தகவல்களை ஒருவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.