வங்கி லாக்கர்கள் பாதுகாப்பானவை என்றாலும், திருட்டு அல்லது இழப்பு ஏற்பட்டால் வங்கியின் பொறுப்பு மற்றும் இழப்பீடு குறித்து தெரிந்துகொள்வது அவசியம். லாக்கர் பாதுகாப்பு குறித்த முழு விவரங்களையும் அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
வங்கி லாக்கர்கள் பலருக்கும் தங்கம், போன்ற பொருட்களை பாதுகாக்க ஒரு பாதுகாப்பான இடமாகும். ஆனால் வங்கிகள், அந்த லாக்கரில் என்ன பொருள் வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடியாது. அதற்கான பதிவு வைத்திருக்க கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது.
29
ரிசர்வ் வங்கி லாக்கர் வழிகாட்டுதல்
லாக்கரில் உள்ள பொருட்கள் திருடப்பட்டாலோ, காணாமல் போனாலோ, வங்கியின் பாதுகாப்பு அலட்சியம்தான் காரணம் இருந்தால் மட்டுமே வங்கி பொறுப்பேற்க வேண்டும். இந்த இழப்பீடு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே வழங்கப்படும்.
39
லாக்கர் வாடகை
வங்கியின் தவறால் இழப்பு ஏற்பட்டால், வாடிக்கையாளர் வருடத்துக்கான லாக்கர் வாடகையின் 100 மடங்கு வரை இழப்பீடு பெறலாம். உதாரணமாக, லாக்கர் வாடகை ரூ.3,000 என்றால், அதிகபட்ச இழப்பீடு ரூ.3 லட்சம் வரை கிடைக்கும்.
வாடிக்கையாளர் சாவியை இழந்தால், அல்லது பாதுகாப்பாக வைக்க தவறினால், வங்கி பொறுப்பல்ல. மேலும், இயற்கை பேரிடர்களால் (தீ, வெள்ளம்) சேதமடைந்தால் கூட வங்கி பொறுப்பேற்காது.
59
லாக்கர்களுக்கு காப்பீடு
வங்கிகள் தங்களது லாக்கர்களுக்கு காப்பீடு வழங்குவதில்லை. ஆனால், தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து தங்களது பொருட்களை காப்பீடு எடுக்கலாம். இது விருப்ப அடிப்படையில் மட்டுமே.
69
இலவச லாக்கர்
SBI போன்ற வங்கிகள் ஆண்டுக்கு 12 முறை இலவச லாக்கர் அணுகலை வழங்குகின்றன. அதற்குப் பிறகு, ஒவ்வொரு வருகைக்கும் ரூ.100 + GST கட்டணம் வசூலிக்கப்படும். இது வங்கிக்கு ஏற்ப மாறுபடலாம்.
79
வங்கி விதிகள்
வங்கி லாக்கர்கள் இருக்கும் பகுதிகளில் CCTV கட்டாயம் பொருத்த வேண்டும். மேலும் 180 நாட்கள் வரை பதிவுகளை வைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர் லாக்கரை திறக்கும் போதும், அவருக்கு SMS அல்லது மின்னஞ்சல் வழியாக தகவல் அனுப்ப வேண்டும்.
89
லாக்கர் வாடகை
ஒரு லாக்கர் பெறுவதற்கு எப்டி (FD) கட்டாயமில்லை. ஆனால் வாடகை செலுத்த தாமதமாக இருந்தால், அந்த நிலுவை தொகையை வசூலிக்க, குறைந்த அளவு எப்டி கேட்கலாம். இது வாடகை மற்றும் பிற செலவுகளை மட்டும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
99
வாடிக்கையாளர்கள்
வங்கி லாக்கர் என்பது பாதுகாப்பானது. ஆனால், பாதுகாப்புக்கான பொறுப்பு வாடிக்கையாளருக்கும், வங்கிக்கும் சமமாகவே இருக்க வேண்டும். எந்த ஒரு சந்தேகத்துக்கும் உங்கள் வங்கியை நேரில் தொடர்பு கொள்ளவும்.