நீண்ட கால முதலீட்டுக்கு அதிக பலன்! மத்திய பட்ஜெட்டில் காத்திருக்கும் சூப்பர் அறிவிப்பு!

First Published | Jan 5, 2025, 10:07 PM IST

Union Budget 2025: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிதித்துறையின் பிரதிநிதிகளை சந்தித்து பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, பிக்சட் டெபாசிட் (FD) உள்பட நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களில் வரிச் சலுகைகள் அளிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

Union Budget 2025

மத்திய பட்ஜெட் 2025 நெருங்கி வருவதால், நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்புகளைத் தூண்டவும் வங்கித் துறைக்கு புத்துயிர் அளிக்கவும் புதிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிதித்துறையின் பிரதிநிதிகளை சந்தித்து பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, பிக்சட் டெபாசிட் (FD) உள்பட நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களில் வரிச் சலுகைகள் அளிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

Fixed Deposits

நிதியமைச்சருடனான கூட்டத்தில் கலந்துகொண்ட வங்கிப் பிரதிநிதிகள் பிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டியை வழக்கமான வருமான வரி கட்டமைப்பில் இருந்து வேறுபடுத்த பரிந்துரைத்தனர். நீண்ட கால மூலதன ஆதாய வரியுடன் இணைக்கலாம் என்றும் முன்மொழிந்தனர்.

இத்தகைய நடவடிக்கைகள் பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்வதை கவர்ச்சிகரமானதாக மாற்றும் என்றும் குறைந்துவரும் டெபாசிட் வளர்ச்சியை உயர்த்த நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பை ஊக்குவிக்கும் என்றும் கூறினர். தற்போது, ​​பிக்சட் டெபாசிட்களில் கிடைக்கும் வட்டிக்கு வழக்கமான வருமான வரி வரம்பின் கீழ் வரி விதிக்கப்படுகிறது.

Tap to resize

Capital Markets

எடெல்வீஸ் மியூச்சுவல் ஃபண்டின் தலைமை நிர்வாக அதிகாரி ராதிகா குப்தா, மூலதனச் சந்தைகளில் அதிக செயல்திறனின் அவசியத்தை வலியுறுத்தினார். பத்திரங்கள் மற்றும் ஈக்விட்டி முதலீடுகள் மூலம் நீண்ட கால சேமிப்புக்கான ஊக்கத்தொகைகளை அவர் முன்மொழிந்தார்.

Tax relief on FDs

பிக்சட் டெபாசிட் (FD) திட்டங்களில் பெறப்படும் வட்டியானது வருமான வரிச் சட்டத்தின் கீழ் "பிற ஆதாரங்களில் இருந்து வரும் வருமானம்" என வகைப்படுத்தப்பட்டு தனிப்பட்ட வரி அடுக்குகளின்படி வரி விதிக்கப்படுகிறது. வரி இணக்கத்தை எளிதாக்க, தனிநபர்கள் வட்டி சான்றிதழ்கள் மற்றும் படிவம் 26AS போன்ற அத்தியாவசிய ஆவணங்களை சேகரிக்க வேண்டும்.

நிதியாண்டின் தொடக்கத்தில் படிவம் 15G அல்லது 15H ஐச் சமர்ப்பிப்பதன் மூலம், தனிநபர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் TDS தொகை கழிக்கப்படுவதைத் தவிர்க்க உதவும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Mutual Fund Savings

சாமானிய மக்கள் சேமிப்புக்குத் தேர்வு செய்யும் முக்கியான வழியாக பிக்சட் டெபாசிட்கள் உள்ளன. இருந்தாலும், அவற்றின் ஆதிக்கம் குறைந்து வருகிறது. சேமிப்பில் கிட்டத்தட்ட 15% FD-களுக்குக் கிடைக்கிறது. ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் ஈக்விட்டி பங்குகள் வளர்ச்சியடைந்து வருகின்றன.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர், இந்த வழிகளை நோக்கிய மாற்றத்தை எடுத்துரைத்தார். வங்கிகள் கடன் மற்றும் டெபாசிட் வளர்ச்சிக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Nirmala Sitharaman Budget 2025

பட்ஜெட் 2025 பாரம்பரிய மற்றும் நவீன சேமிப்பு கருவிகளை சமநிலைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வரிச் சலுகைகளை அறிமுகப்படுத்தி, மூலதனச் சந்தையை மேம்படுத்துவதன் மூலம், பரந்த பொருளாதார இலக்குகளை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படலாம். நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பையும் அதிகரிக்க முடியும்.

Latest Videos

click me!