பிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்திய எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிகள்!

First Published | Jan 5, 2025, 5:04 PM IST

SBI HDFC Bank FD rates: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியும், மிகப் பெரிய தனியார் வங்கியும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்குப் அதிக வட்டி விகிதங்களை அறிவித்துள்ளன.

SBI, HDFC Bank Fixed deposit

எஸ்பிஐ 80 வயதுக்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு புதிய வகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சூப்பர் சீனியர்களுக்கு மூத்த குடிமக்களை விட 10 அடிப்படை புள்ளிகள் அதிகம் வட்டி கிடைக்கும்.

HDFC Interest rate

இதேபோல, ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கி ரூ.5 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மொத்த வைப்புத்தொகையின் வருவாயை 5-10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.

Tap to resize

SBI fixed deposit scheme

அதிக வாடிக்கையாளர்களைக் கவர்தற்காக புதிய பிக்ஸட் டெபாசிட் பிரிவை எஸ்பிஐ உருவாக்கியுள்ளது. 80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு அதிக வருமானத்தை வழங்குவதைத் தவிர, வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு இலக்குகளைத் தீர்மானித்து, அதற்கேற்ப ரெக்கரிங் டெபாசிட்களைச் செய்யவும் அனுமதிக்கிறது.

Fixed deposit (FD) schemes

வளர்ச்சியை அதிகரிக்க, வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற பரவலான கோரிக்கை எழுந்துள்ள நிலையில் இந்த வட்டி விகிதத் திருத்தம் வந்துள்ளது. இதற்கிடையில், ரிசர்வ் வங்கியின் தரவுகள் வங்கி வைப்புத்தொகை மற்றும் வங்கிக் கடன்கள் அதே வேகத்தில் இருப்பதைக் காட்டுகிறது. டிசம்பர் நடுப்பகுதியில் 11.5% வளர்ச்சி பதிவாகியுள்ளது.

Fixed deposit interest for super seniors

இரண்டு பெரிய வங்கிகளின் வட்டி விகிதம் அதிகரிப்பு மற்ற வங்கிகளின் வட்டி விகிதம் உயரவும் வழிவகுக்கிறது. ஆனால், எச்டிஎஃப்சி வங்கியின் வட்டி விகிதத் திருத்தம் மற்ற வங்கிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

Fixed Deposit Returns

2024 டிசம்பரில் முடிவடைந்த காலாண்டில் வணிக புள்ளிவிவரங்களை அறிவித்த பேங்க் ஆஃப் பரோடா, அதன் குளோபல் அட்வான்ஸ் மற்றும் குளோபல் டெபாசிட் இரண்டும் முறையே 11.7% மற்றும் 11.8% வளர்ச்சி கண்டிருப்பதாகக் கூறியுள்ளது.

Latest Videos

click me!