DRDO அதிகாரியிடம் 13 லட்சம் அபேஸ்! சைபர் கிரிமினல்களிடம் இப்படி சிக்காதீங்க!

First Published | Jan 5, 2025, 8:54 PM IST

புனேவில் சமீபத்தில் நடந்த சைபர் மோசடி, பணத்தைத் திருடுவதற்கு மோசடி செய்பவர்களால் கையாளப்படும் ரிமோட் ஆக்சஸ் தந்திரத்தை அம்பலப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டிஆர்டிஓ) பணிபுரியும் அதிகாரி ஒருவர் பெரிய தொகையைப் பறிகொடுத்திருக்கிறார்.

57 வயது தொழில்நுட்ப அதிகாரியான அவர் ரிமோட் ஆக்சஸ் மோசடியில் ரூ.13 லட்சத்தை இழந்துள்ளார். மோசடி செய்பவர்கள் அந்த அதிகாரியின் நம்பிக்கையைப் பெற வங்கி அதிகாரி போலக் காட்டிக் கொண்டு பேசியுள்ளனர்.

Cyber Crime

அந்த அதிகாரிக்கு ஒரு பொதுத்துறை வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஒருவரிடமிருந்து வாட்ஸ்அப் செய்தி வந்தது. அவரது KYC விவரங்கள் காலாவதியாகிவிட்டன என்றும் அவற்றைப் அப்டேட் செய்யாவிட்டால் அவரது கணக்கு முடக்கப்படும் என்றும் அந்த மெசேஜில் கூறியிருந்தது.

Tap to resize

cyber crime

அதை நம்பிய DRDO அதிகாரி அந்த மெசேஜில் இருந்த லிங்க்கை கிளிக் செய்து, சைபர் கிரிமினல்களின் செயலியை டவுன்லோட் செய்துவிட்டார். அது அந்த அதிகாரிக்குத் தெரியாமலே மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. பிறகு, அது கிரிமினல்களின் ரிமோட் ஆக்சஸ் செயலியாக செயல்படத் தொடங்கியுள்ளது.

digital arrest cyber crime kozhikode native lost 1.5 crore money

சிறிது நேரத்தில் அதிகாரியின் மொபைலுக்கு OTPs மெசேஜ்கள் வரத் தொடங்கின. ஆனால் அந்த நேரத்தில் அவர் எந்த பரிவர்த்தனையும் செய்யவில்லை என்பதால், அவற்றைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார். ஆனால், சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 12.95 லட்சம் மாயமானது.

பணம் அபேஸ் செய்யப்பட்ட பிறகுதான் அந்த அதிகாரி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். உடனே அவர் போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கு ரிமோட் ஆக்சஸ் முறையில் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்த எச்சரிக்கையாக உள்ளது.

அங்கு மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி, தீங்கிழைக்கும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வைக்கின்றனர். அந்தச் செயலியின் மூலம் பாதிக்கப்பட்டவரின் செல்போனை தொலைவில் இருந்தே அணுகும் வசதியைப் பெறுகிறார்கள். தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பாதிக்கப்பட்டவரின் கணக்கில் இருந்து தகவல்களைத் திருடுகிறார்கள். பணத்தையும் பறிக்கிறார்கள்.

இந்த மோசடியில் சைபர் குற்றவாளிகள் KYC அப்டேட் செய்யவேண்டும், நிலுவையில் உள்ள பில் தொகையைச் செலுத்த வேண்டும் என்பன போன்ற பொய்யான காரணங்களைக் கூறி, தீங்கு விளைவிக்கும் அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்ய வைக்கிறார்கள்.

Latest Videos

click me!