பட்ஜெட் 2025: மிடில் கிளாஸ் வரி செலுத்துவோருக்கு 5 அறிவிப்புகள்

First Published | Jan 13, 2025, 4:53 PM IST

சில நாட்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2025ஐ தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு என்னென்ன சலுகைகள் இருக்கும் என்பது குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன.

Budget 2025

சில நாட்களில் நிர்மலா சீதாராமன் 2025 பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு என்னென்ன சலுகைகள் இருக்கும் என்பது குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன. பட்ஜெட் 2025க்கான வரி குறைப்பு பரிந்துரைகளை பொருளாதார நிபுணர்கள் வழங்கியுள்ளனர்.

Nirmala Sitharaman

வரி குறைப்பு மக்களின் கைகளில் அதிக பணப்புழக்கத்தை உருவாக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மக்கள் அதிகமாக செலவு செய்தால் நாட்டின் ஜிடிபி அதிகரிக்கும் என மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Budget

இந்த ஐந்து பரிந்துரைகளையும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தால் வரி செலுத்துவோருக்கு பயனளிக்கும், ஜிடிபியும் அதிகரிக்கும் என வரி நிபுணர்கள் கருதுகின்றனர். ஆண்டுக்கு 15-20 லட்சம் ரூபாய் வரை வருமான வரம்பிற்கு அரசு வரி குறைப்பை அறிவிக்கலாம்.

Taxpayer Benefits

கடந்த சில ஆண்டுகளாக பணவீக்கம் அதிகரித்துள்ளதால், பெருநகரங்களில் 15-20 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கான வரி விலக்கு வரம்பை அரசு அதிகரித்தால் அவர்களுக்கு பயனளிக்கும்.

Middle Class Taxpayers

வீட்டுக் கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகை இரண்டிற்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்திற்கான வரி விலக்கு வரம்பை அதிகரிக்கலாம்.

யுபிஐ, கேஸ் முதல் பிஎஃப் வரை; ஜனவரி முதல் புதிய மாற்றங்கள் - முழு விபரம்

Latest Videos

click me!