Senior Citizens Savings Scheme
கடந்த சில மாதங்களாக, முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் நஷ்டத்தை சந்தித்து வருவதால், பலர் பாதுகாப்பான முதலீட்டுப் பாதையை பின்பற்றி வருகின்றனர். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தைத் திட்டமிடுவதற்கான சிறந்த முதலீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
SCSS Tax Deduction
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஓய்வு பெற்றவர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்யலாம். அரசு நடத்தும் இந்தத் திட்டம் சிறுசேமிப்புத் திட்டங்களிலேயே அதிக வட்டியை அளிக்கிறது. இது ஓய்வு பெற்றவர்களுக்கு தங்கள் சேமிப்பை அதிகரிக்க விரும்பும் ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக அமைகிறது.
SCSS age limit and eligibility
எவ்வளவு வட்டி கிடைக்கும்?
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் 8.2% ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதிய நிதியைப் பாதுகாப்பதோடு நிலையான வருமானத்தைப் பெறவும் உதவுகிறது. இத்திட்டம் எவ்வாறு செயல்படுகிறது, அதன் பலன்கள் என்னென்ன என்று விரிவாகப் பார்க்கலாம்.
Senior Citizen Investment
SCSS திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?
மூத்த குடிமக்கள் இத்திட்டத்தில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். 1 லட்சம் வரையிலான டெபாசிட்களை ரொக்கமாக செய்யலாம். அதே சமயம் ரூ.1 லட்சத்திற்கு மேல் உள்ள தொகையை காசோலையாக செலுத்த வேண்டும்.
Senior Citizen Scheme Interest Rate
24 லட்சம் சம்பாதிப்பது எப்படி?
ஓய்வுபெற்ற தம்பதிகள் தனித்தனி கணக்குகளைத் திறப்பதன் மூலம் அதிகபட்ச பலனைப் பெறலாம். இருவரும் சேர்ந்த மொத்தம் ரூ.60 லட்சம் முதலீடு செய்யலாம். இதன் மூலம் காலாண்டு வட்டியாக ரூ.1,20,300 கிடைக்கும். அதே நேரத்தில், ஆண்டு அடிப்படையில் வட்டி வருமானம் ரூ.4,81,200 ஆக இருக்கும். இதேபோல், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைந்தால், மொத்தம் ரூ.24,06,000 வட்டி கிடைக்கும். அதாவது, இரண்டு கணக்குகளில் ரூ.60 லட்சத்தை முதலீடு செய்த பிறகு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.24 லட்சத்தை வட்டியாகப் பெறலாம்.
Senior Citizens Savings Scheme Benefits
வருமான வரிச் சலுகை:
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 8.2% வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது, சுகன்யா சம்ரித்தி யோஜனா போல அதிக வட்டி செலுத்தும் சிறு சேமிப்புத் திட்டம் இதுவாகும். இத்திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகை பெறலாம்.
Senior Citizens Pension Planning
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் அதிகபட்ச தொகையான ரூ.30 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
காலாண்டு வட்டி: ரூ.60,150
ஆண்டு வட்டி: ரூ.2,40,600
ஐந்து ஆண்டுகளில் மொத்த வட்டி: ரூ.12,03,000
மொத்த முதிர்வுத் தொகை: ரூ.42,03,000
ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் மற்றும் நிதிப் பாதுகாப்பை விரும்புவோருக்கு மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஒரு சிறந்த வழி.