8th Pay Commission Updates
மத்திய அரசு ஊழியர்களிடையே எட்டாவது ஊதியக் குழு குறித்த எதிர்பார்ப்புகள் நீண்ட காலமாகவே நிலவி வருகின்றன. எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும். குறைந்தபட்ச சம்பளம் ரூ.51,500 ஆக இருக்கும்.
Govt Employees
எட்டாவது ஊதியக் குழு எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து நிதி இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி விளக்கமளித்துள்ளார். எட்டாவது ஊதியக் குழுவை அமைப்பதற்கான எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை என்று நிதி இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி கூறினார்.
Central Govt Employees
அடுத்த ஊதியக் குழுவை அமைப்பதற்கான எந்தவொரு திட்டமும் இன்னும் இல்லை. எட்டாவது ஊதியக் குழு விரைவில் அமைக்கப்படும் என்ற அனைத்து வதந்திகளுக்கும் அரசின் இந்த அறிக்கை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Central Govt Employees
ஏழாவது ஊதியக் குழு 2016 இல் நடைமுறைக்கு வந்தது. அப்போது குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2.5 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஊழியர்கள் எட்டாவது ஊதியக் குழுவை எதிர்பார்க்கின்றனர்.