இனி BSNL Speed பிச்சுக்கும்.! விழி பிதுங்கி நிற்கும் ஏர்டெல், ஜியோ.! காரணம் தெரியுமா.?!

Published : Aug 16, 2025, 12:32 PM IST

முகேஷ் அம்பானியின் ஜியோ, சுனில் மிட்டலின் ஏர்டெல் நிறுவனங்களுக்கு கடும் போட்டி உருவாகியுள்ளது. BSNL தற்போது தொலைத்தொடர்பு சந்தையில் அதிரடியாக நுழைந்துள்ளது. 47,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. 1 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தையும் வழங்குகிறது. 

PREV
15
முழு வீச்சில் களம் இறங்கும் BSNL
இந்திய தொலைத்தொடர்பு துறையில் கடும் போட்டி நிலவுகிறது. ஜியோ, ஏர்டெல் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், BSNL மீண்டும் இரு நிறுவனங்களுக்கும் போட்டியாக உள்ளது. தொலைத்தொடர்பு சந்தையில் மீண்டும் இடம்பிடிக்க BSNL படிப்படியாக முயற்சி செய்து வருகிறது. இதில் வெற்றியும் பெற்று வருகிறது. தற்போது BSNL-ன் நடவடிக்கை முகேஷ் அம்பானியின் ஜியோ, சுனில் மிட்டலின் ஏர்டெல் நிறுவனங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
25
அப்பாடி இவ்ளோ முதலீடா?!
BSNL தற்போது ரூ.47,000 கோடி முதலீடு செய்கிறது. தனது 4G சேவையை விரிவுபடுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நெட்வொர்க் மற்றும் டேட்டாவை வழங்கவும் BSNL பெரிய முதலீடு செய்துள்ளது. ஏற்கனவே BSNL 1 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தையும் அறிவித்துள்ளது, இது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
35
ஸ்பீடு பிச்சுக்கும்.! சுத்தவே சுத்தாது.!
ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் BSNL ரூ.47,000 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 4G நெட்வொர்க் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கச் செய்வதோடு, BSNL வாடிக்கையாளர்கள் எந்தத் தடையும் இல்லாமல் டேட்டா சேவையைப் பயன்படுத்தும் வகையில் செய்ய உள்ளதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
45
"BSNL 5G சேவைக்கு மேம்படுத்தப்படும்"
நாடு முழுவதும் மொத்தம் 1 லட்சம் 4G BSNL டவர்கள் அமைக்கப்பட உள்ளன. நெட்வொர்க்கை வலுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 4G சேவை விரிவாக்கத்துடன், BSNL 5G சேவை குறித்தும் முக்கிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. விரைவில் BSNL வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற 4G சேவை கிடைக்கும். இதையடுத்து BSNL 5G சேவைக்கு மேம்படுத்தப்படும் என்று ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
55
1 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் போதும், தினமும் 2GB டேட்டா கிடைக்கும்
BSNL ஏற்கனவே குறிப்பிட்ட காலத்திற்கு Freedom Offer-ஐ அறிவித்துள்ளது. வெறும் 1 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் போதும், தினமும் 2GB டேட்டா (4G), 100 SMS, வரம்பற்ற உள்ளூர் அழைப்புகள் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது. BSNL-ன் இந்த நடவடிக்கைகள் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு கடும் அடியாக அமைந்துள்ளது.
Read more Photos on
click me!

Recommended Stories