சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூ,9275க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 40 ரூபாய் குறைந்து 74,200 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராம் 127 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.