
சர்வதேச பங்குச்சந்தைகளின் போக்கில் தடாலடி மாற்றம் ஏதும் காணப்படாததால் அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. இதனால் திங்கள் முதல் வியாழன் வரையிலான காலத்தில் சந்தைகள் நேர்மறையாகவே வர்த்தகமாயின. வியாழக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டென் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டென் நிஃப்டி ஆகியவை உயர்ந்தே முடிவடைந்தன.
குறிப்பாக, Nifty 50 குறியீடு 24,500க்கு மேல் நிலைத்து இருப்பது, சந்தையில் நம்பிக்கையூட்டும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் சந்தை நிபுணர்கள், முதலீட்டாளர்கள் ஒரு சில பங்குகளை வாங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கின்றனர். வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் Sensex மற்றும் Nifty 50 குறியீடுகள் 1% வரையும் வர்த்தக முடிவில் 0.5% வரையிலும் உயர்ந்து முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் Nifty 50 தற்போது 25,000 என்ற முக்கிய எதிர்ப்பு நிலையை எதிர்கொண்டு வருகிறது. இது மீறப்பட்டால், குறியீடு 25,400 வரை செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப ரீதியாக வலுவான breakout பங்குகளை கவனத்தில் கொண்டு முதலீடு செய்யலாம் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழில்நுட்ப ரீதியாக நிப்டி குறியீடு தனது 20-நாள் எக்ஸ்பொனென்ஷியல் மூவிங் அவரேஜ் (EMA) நிலையை மீண்டும் பெற்றுள்ளதன் மூலம், அடிப்படைப் போக்கில் வலிமை திரும்பும் சாத்தியம் உள்ளதைக் காட்டுகிறது. நிப்டி குறியீடு 24,500 பகுதியில் வலுவான அடிப்படை அமைத்துவிட்டதாகத் தெரிகிறது.மேல்நோக்கி பார்த்தால், 24,900 அளவில் நிப்டிக்கு குறுகிய கால எதிர்ப்பு (resistance) எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்று வெளியிட உள்ள பணவியல் கொள்கை அறிவிப்பை முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். இந்த அறிவிப்பில், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தையில் எதிரொலிக்கும் என்பதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாபத்தை கொடுக்க கூடிய சில பங்குகளை சந்தை நிபுணர்கள் இங்கு பரிந்துரை செய்கின்றனர்.
ஜே கே சிமென்ட் நிறுவனத்தின் பங்குகளை 5 ஆயிரத்து 715 ரூபாய் விலையில் வாங்கலாம் எனவும் அதிகபட்சமாக 6 ஆயிரத்து 300 ரூபாய் வரை உயரும் என்றும் சநதை நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஸ்டாப் லாஸ்: ரூ.5440. ஜே கே சிமென்ட் லிமிடெட் நிறுவனம் (JK Cement Ltd) என்பது இந்தியாவிலும், பிற நாடுகளிலும் சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு முன்னணி நிறுவனம் ஆகும். இது இந்தியாவின் முதல் 10 சிமெண்ட் தயாரிப்பாளர்களில் ஒன்றாகும், மேலும் வெள்ளை சிமெண்ட் உற்பத்தியில் உலகில் மூன்றாவது பெரிய நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம் 1994 இல் நிறுவப்பட்டது, லாலா கம்லபட் சிங்கானியா (Lala Kamlapat Singhania) என்பவரால் நிறுவப்பட்டது
J K Cement
வாங்கும் விலை: ரூ.5715
இலக்கு விலை: ரூ.6300
ஸ்டாப் லாஸ்: ரூ.5440
ஜேஎம் பைனான்சியல் ரூ.141.62 ரூபாய்க்கு வாங்கலாம் என்று பரிந்துரை செய்யும் சந்தை நிபுணர்கள், அதிகபட்சமாக 158 ரூபாய் வரை செல்லும் என கூறுகின்றனர். ஸ்டாப் லாஸ்: ரூ.134. ஜேஎம் பைனான்சியல் லிமிடெட் (JM Financial Ltd) ஒரு முதலீட்டு வங்கி நிறுவனம், சொத்து மேலாண்மை, தனியார் கடன், புரோக்கிங் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளின் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. பெருநிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு நிதி ஆலோசனை, சொத்து மேலாண்மை, மாற்று முதலீடு, புரோக்கிங் மற்றும் பிற சேவைகளை வழங்குகிறது.
JM Financial
வாங்கும் விலை: ரூ.141.62
இலக்கு விலை: ரூ.158
ஸ்டாப் லாஸ்: ரூ.134
வெல்ஸ்பன் கார்ப் நிறுவனத்தின் பங்குகளை ரூ.962.35 ரூபாய் விலையில் வாங்கி லாபத்தை அள்ளலாம். அதிகபட்சமாக ரூ.1070 வரை செல்லும். ஸ்டாப்லாஸ் ரூ.911.வெல்ஸ்பன் கார்ப் லிமிடெட் (வெல்ஸ்பன் குஜராத் ஸ்டால் ரோஹ்ரென்) என்பது இந்தியாவின் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும். இது பெரிய விட்டம் கொண்ட குழாய்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது மற்றும் ஆறு கண்டங்களில் பல நாடுகளில் செயல்படுகிறது
Welspun Corp
வாங்கும் விலை: ரூ.962.35
இலக்கு விலை: ரூ.1070
ஸ்டாப் லாஸ்: ரூ.911
சோபா லிமிடெட் பங்குகளை ரூ.1602.30 விலையில் வாங்கலாம் எனவும் ஆயிரத்து 775 ரூபாய் வரை பங்குகள் செல்லும் எனவும் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்டாப் லாஸ்: ₹1520. சோபா லிமிடெட் (SOBHA Limited) என்பது ஒரு பெரிய மற்றும் பரந்த ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமாகும். இது 1976 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, அதன் சொந்த இணையதளத்தின்படி. சோபா நிறுவனம் இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாகும், குறிப்பாக பெங்களூரு, கேரளா, சென்னை, டெல்லி, கோயம்புத்தூர், மைசூர், புனே போன்ற நகரங்களில் தனது இருப்பை கொண்டுள்ளது Sobha Limited.சோபா நிறுவனம் குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்புகள், வரிசை வீடுகள், வில்லாக்கள், மாநாட்டு மையங்கள், விடுதி வசதிகள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள், உணவு நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் போன்றவற்றை உருவாக்குகிறது.
Sobha
வாங்கும் விலை: ₹1602.30
இலக்கு விலை: ₹1775
ஸ்டாப் லாஸ்: ₹1520
JSW இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்குகளை 307 ரூபாய் 10 காசுகளுக்கு வாங்கலாம் எனவும் அதிகபட்சமாக 338 ரூபாய் வைர செல்ல வாய்ப்புள்ளதாகவும் பங்குச்சந்தை ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்டாப் லாஸ்: ரூ.292.JSW இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்பது JSW குழுமத்தின் ஒரு அங்கமாகும், இது இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் வணிக துறைமுக ஆபரேட்டர் ஆகும். இது வணிக துறைமுகங்களை இயக்குவது, சரக்கு கையாளுதல், தளவாடங்கள், சேமிப்பு மற்றும் பிற மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்குவது போன்ற சேவைகளை வழங்குகிறது.
JSW Infrastructure
வாங்கும் விலை: ரூ.307.10
இலக்கு விலை: ரூ.338
ஸ்டாப் லாஸ்: ரூ.292