Tatkal Train Ticket: தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்கின்றன. ஆனால் பலர் அறியாமல் செய்யும் ஒரு தவறு, அவர்களின் டிக்கெட் வாய்ப்பையே பறித்துவிடுகிறது.
கடைசி நேரத்தில் ரயில் பயணம் செய்ய வேண்டிய சூழல் பலருக்கும் ஏற்படுகிறது. அப்போது அனைவரும் நம்புவது தட்கல் டிக்கெட் முறையையே. ஆனால், டிக்கெட் வெளியான சில நிமிடங்களிலேயே அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிடுவதால், பல பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை உருவாகிறது. இருப்பினும், சரியான தயாரிப்புடன் செயல்பட்டால் தட்கல் டிக்கெட் பெறும் வாய்ப்பை உயர்த்த முடியும்.
25
தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங் டிப்ஸ்
தட்கல் புக்கிங்கில் நேரமே முக்கியமான ஆயுதம். டிக்கெட் புக்கிங் தொடங்கிய பிறகு பயணிகளின் பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடுவதில் பல வினாடிகள் வீணாகின்றன. இதை தவிர்க்க ஐஆர்சிடிசி கணக்கில் உள்ள மாஸ்டர் லிஸ்ட் வசதியை பயன்படுத்தலாம். முன்கூட்டியே பயணிகளின் விவரங்களை சேமித்து வைத்தால், புக்கிங் நேரத்தில் அவற்றைத் தேர்வு செய்வது போதுமானதாக இருக்கும்.
பேமெண்ட் செய்யும் கட்டத்திலும் பலர் நேரத்தை இழக்கிறார்கள். குறிப்பாக ஓடிபி வர காத்திருப்பது புக்கிங் வெற்றியை பாதிக்கக்கூடும். இதற்குப் பதிலாக யுபிஐ அல்லது ஐஆர்சிடிசி வாலெட் பயன்படுத்தினால் சில நொடிகளில் கட்டணத்தை செலுத்த முடியும். தட்கல் புக்கிங்கில் இந்த சில நொடிகளே வெற்றி மற்றும் தோல்வியை தீர்மானிக்கக்கூடியவை.
மேலும், புக்கிங் தொடங்குவதற்கு முன்பாகவே சரியான நேரத்தில் லாகின் செய்வது அவசியம். ஏசி டிக்கெட்டுகளுக்காக முன்கூட்டியே தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் முகவரி, பின்கோடு போன்ற தகவல்களையும் முன்கூட்டியே டைப் செய்து வைத்திருப்பது நேரத்தை மிச்சப்படுத்தும். புக்கிங் நேரத்தில் ஒவ்வொரு வினாடியும் மதிப்புமிக்கதாக இருக்கும்.
55
தட்கல் ரயில் டிக்கெட்
சில நேரங்களில் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது மொபைல் செயலி மந்தமாக இயங்கலாம். எனவே மொபைல் மற்றும் லேப்டாப் இரண்டையும் பயன்படுத்தி மாற்று வாய்ப்பை உருவாக்கிக் கொள்வது புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும். தட்கல் டிக்கெட் பெறுவது அதிர்ஷ்டம் மட்டுமல்ல, சரியான திட்டமிடலின் பலனும் கூட. இந்த எளிய டிப்ஸ்களை பின்பற்றினால் அடுத்த முறை தட்கல் டிக்கெட் பெறும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.