இந்தியாவில் தங்கத்தின் விலை விண்ணை முட்டுகிறது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1,30,000-ஐ தாண்டியுள்ளது. ஆனால், சில நாடுகளில் இந்தியாவை விட தங்கம் விலை குறைவாக இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த நாடுகள் எவை என்று பார்ப்போம். துபாய் தங்கத்திற்கு பெயர் பெற்றது. இங்கு 24 காரட் 10 கிராம் தங்கம் ரூ.1,14,740. இது இந்தியாவை விட ரூ.15,000 குறைவு. ஜிஎஸ்டி இல்லாமை, குறைந்த இறக்குமதி வரி ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும்.