மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு எடுத்து வருகிறது. ‘பாரத் அட்டா’ மற்றும் ‘பாரத் ரைஸ்’ விற்பனையின் இரண்டாம் கட்டத்தை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
நுகர்வோருக்கு மலிவு விலையில் தரமான அரிசி மற்றும் மாவு ஆகியவற்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று அமைச்சர் கூறினார். பிரதமர் மோடி தலைமையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது அதன் இரண்டாம் கட்டம் தொடங்கியுள்ளது