பழைய ரூ.5 நோட்டு இருக்கா? ரூ. 21 லட்சம் உங்களுக்காக ரெடியா இருக்கு!

Published : Nov 09, 2024, 07:43 AM ISTUpdated : Nov 14, 2024, 08:38 AM IST

சிலர் ரூபாய் நோட்டுகளைச் சேகரிப்பதை பொழுதுபோக்காக எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் பழைய மற்றும் வித்தியாசமான நாணயங்கள், ரூபாய் நோட்டுகளைச் சேகரித்து பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் 5 ரூபாய் பற்றி ஒரு விஷயத்தைப் பார்ப்போம்.

PREV
17
பழைய ரூ.5 நோட்டு இருக்கா? ரூ. 21 லட்சம் உங்களுக்காக ரெடியா இருக்கு!
Old Five Rupees Note

அதிர்ஷ்டம் எப்போது கதவைத் தட்டும் என்று யாருக்கும் தெரியாது. இந்த உலகில் பல கோடீஸ்வரர்கள் உள்ளனர். ஒரு காலத்தில் மதிக்கப்படாத விஷயங்கள் இப்போது வைரத்தை விட மதிப்புமிக்கதாக மாறுவதை நாம் காண்கிறோம். அப்படிப்பட்ட பொருள்களில் கரன்சி நோட்டுகளும் அடங்கும். சில பழைய கரன்சி நோட்டுகள் இருந்தால் உங்களிடம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரன் ஆகிவிடலாம்.

27
Old Currency

சிலர் கரன்சி நோட்டுகளை பொழுதுபோக்காக சேகரிக்கிறார்கள். அபூர்வமான நாணயங்கள், பழைய நோட்டுகள் ஆகியவற்றைச் சேகரித்து பொக்கிஷமாகம்ப் பாதுகாக்கிறார்கள். இப்படிச் சேகரிப்பதில் ஆர்வமுள்ள சிலர் பெரும் தொகையைக் கொடுத்து பழைய கரன்சி நோட்டுகளையும் நாணயங்களையும் வாங்குகிறார்கள். இந்த சந்தைக்கென பிரத்யேகமாக சில இணையதளங்களும் உள்ளன.

37
Old 5 Rupees Notes

தற்போது பழைய 5 ரூபாய்நோட்டுகளை எங்கும் பார்க்க முடியவில்லை. ஆனால் சிலர் அதை தங்கள் பர்ஸில் பத்திரமாக வைத்துக்கொண்டு இருப்பார்கள். அதை வைத்து அவர்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகலாம்.

இந்த 1 ரூபாய் இருந்தா போதும்... 10 லட்சம் ரூபாய் உங்களைத் தேடி வரும்!

47
Old 5 Rupees Note Serial number

ரிசர்வ் வங்கியால் அச்சிடப்படும் ஒவ்வொரு கரன்சி நோட்டுக்கும் வரிசை எண் இருக்கும். ஒவ்வொரு 5 ரூபாய் நோட்டிலும் இதைக் காணலாம். இந்த எண் மூலம் மட்டும் ரூ.21 லட்சம் சம்பாதிக்கலாம். 786 என்ற வரிசை எண் கொண்ட பழைய 5 ரூபாய் நோட்டு இருந்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். 5 ரூபாய் நோட்டில் வரிசை எண் 123456 என இருந்தாலும் பல லட்சங்களைச் சம்பாதிக்கலாம். இவை தவிர பழைய 5 ரூபாய் நோட்டில் டிராக்டரில் ஒரு விவசாயியின் படம் இருந்தால் அதுவும் பல லட்சங்களைக் கொடுக்கும்.

57
Old 5 Rupees note Auction

பழைய 5 ரூபாய் நோட்டுகளை ஏலம் விடலாம் என்பது பலருக்கும் தெரியாது. தேசிய மற்றும் சர்வதேச இணையதளங்கள் மூலம் உங்களின் 5 ரூபாய் நோட்டுகளை ஏலம் விடலாம். இதற்காக பல இணையதளங்கள் உள்ளன. அவற்றின் வழியாக உங்கள் பழைய 5 நோட்டு மூலம் லட்சக்கணக்கில் பணத்தைக் குவிக்கலாம்.

67
Coin bazzar

coinbazzar.com போன்ற வலைத்தளங்களைப் பார்வையிடவும். அங்கு நீங்கள் ஆன்லைன் விற்பனையாளராகப் பதிவு செய்துகொள்ளலாம். பிறகு, உங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளின் படத்தை அப்லோட் செய்து, அதைப் பற்றிய விவரங்களையும் குறிப்பிட வேண்டும். பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளைச் சேகரிப்பதில் ஆர்வமுள்ளவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

77
RBI on old currency

வீட்டில் இருந்தபடியே லட்சக்கணக்கில் சம்பாதிக்க இது ஒரு அரிய வாய்ப்பாக உள்ளது. ஆனால் ஆன்லைனில் பழைய ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்களை விற்கவோ வாங்கவோ ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அனுமதி இல்லை என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

இந்த 1 ரூபாய் இருந்தா போதும்... 10 லட்சம் ரூபாய் உங்களைத் தேடி வரும்!

Read more Photos on
click me!

Recommended Stories