
Housing Scheme : கனவு இல்லத்தை எப்படி உங்களுக்கு சொந்தமாக்குவது என்று யோசிக்கிறீர்களா? அப்போ இது உங்களுக்கான பதிவு தான். இந்த பதிவானது அரசின் வீட்டு வசதி திட்டம் பற்றி தெளிவாக விளக்குக்கிறது. தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் வீடு இல்லாதோர்க்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போன்று தான் டிடிஏ எனப்படும் வீட்டு வசதி திட்டத்தின் மூலமாக வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. டிடிஏ பிளாட் திட்டம் என்றால் டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் பிளாட் திட்டம். இந்த திட்டத்தில் இதுவரையில் 11 லட்சம் முதல் 2 கோடி வரையில் அடுக்குமாடி வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது மீண்டும் ஒரு முறை இந்த டிடிஏ திட்டம் தொடங்க இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலமாக எப்படி கனவு இல்லத்தை சொந்தமாக்குவது என்று பார்க்கலாம். இந்த திட்டத்தில் ஏற்கனவே பயன்பெறாதவர்கள் இப்போது விண்ணப்பித்து அதன் மூலமாக கனவு வீட்டை உங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு டிடிஏ திட்டம் மீண்டும் தொடங்குகிறது. அன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். அதில், முதலில் விண்ணபிக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
11 லட்சத்துக்கு பிளாட் வாங்குவது எப்படி?
ரூ.11 லட்சத்திற்கு எப்படி வீடு வாங்குவது என்று யோசிக்கிறீர்களாக? அதற்காக கொண்டு வரப்பட்டது தான் இந்த டிடிஏ திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக இதுவரையில் ரூ.2 கோடி வரையில் வீடுகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது கட்டத்திற்கான வீடுகள் வழங்கப்பட இருக்கின்றன. இதற்காக வரும் 14 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். இந்த பிளாட்டுகளின் ஆரம்ப விலை ரூ.11.5 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி திட்டத்தின் பங்கேற்க விரும்புபவர்கள் முதலில் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அடுக்குமாடி குடியிருப்பு:
எல்ஐஜி (குறைவான வருமானம் கொண்டவர்கள்) பிரிவினருக்கான ரோகினி செக்டார் 34 மற்றும் 35ல் 250க்கும் அதிகமான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அந்த வீடுகளின் விலை ரூ.12 லட்சம் முதல் ரூ.15.5 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மங்கோல்புரி பகுதியில் 180 வீடுகள் கட்டப்பட்டுள்ளன, அவை EWS (பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர்களுக்கு) வகைக்காக உள்ளன. அவற்றின் விலை ரூ.32 லட்சம் முதல் ரூ. 35 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று நரேலாவின் பிரிவு A1-A4 (பாக்கெட்ஸ் 1A, 1B மற்றும் 1C) இல் 1800 EWS அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.18 முதல் 20 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, சிராஸ்பூர், லோக் நாயக் புரம் மற்றும் பிற பகுதிகளில் உள்ள குடியிருப்புகளும் விற்பனைக்கு தயாராக உள்ளன. மொத்தமாக இந்த திட்டத்தின் மூலமாக 2500 வீடுகள் கட்டப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன.
எவ்வளவு விலைக்கு ஒரு பிளாட் புக் செய்யலாம்?
இந்த வீடுகள் வாங்க எப்படி முன் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டால் முதலில் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று பதிவு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். முதலில் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதோடு இந்த அடுக்குமாடி வீடுகளுக்கு முன்பதிவுத் தொகையை டிடிஏ வெவ்வேறாக வைத்துள்ளது.
EWS வீடுகளுக்கு முன் பதிவிற்கு ரூ.50 ஆயிரமாகவும், எல்ஐஜி வீடுகளுக்கு முன்பதிவு ரூ.1 லட்சமாகவும், எம்ஐஜி வீடுகளுக்கு முன்பதிவு ரூ.4 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, எச்ஐஜி வீடுகளுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் என்று நிர்ணயித்துள்ளது. இந்த முன்பதிவு கட்டணத்துடன் ரூ.2500 பதிவு கட்டணமாக செலுத்தப்பட வேண்டும். இது திரும்ப தரப்பட மாட்டாது.
பதிவு செய்வது எப்படி?
இதற்கான விண்ணப்பங்கள் வரும் 14 ஆம் தேதி முதல் அதிகார்ப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்படும். அதனை பூர்த்தி செய்ய வேண்டும். அடுக்குமாடி வீட்டிற்கு முதலில் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பான் கார்டு மற்றும் அடையாள அட்டை அவசியம். அடையாள சான்றாக பாஸ்போர்ட், அரசு அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றின் சுய சான்றொப்பமிட்ட நகலை வைத்திருப்பது அவசியம்.