வாடகை வீட்டில் ஜிஎஸ்டி மோசடி! ஹவுஸ் ஓனர்கள் ரொம்ப உஷாரா இருக்கணும்!

Published : Feb 10, 2025, 07:54 PM ISTUpdated : Feb 10, 2025, 07:55 PM IST

Tenants GST Fraud: வாடகைக்கு விடும் வீடுகளில் புதுவிதமான மோசடி அதிகரித்து வருகிறது. வாடகைதாரர்கள் போலி நிறுவனங்களைப் பதிவு செய்து ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனால் வீட்டு உரிமையாளர்களும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

PREV
17
வாடகை வீட்டில் ஜிஎஸ்டி மோசடி! ஹவுஸ் ஓனர்கள் ரொம்ப உஷாரா இருக்கணும்!
House rent Scam

ஹவுஸ் ஓனர்கள் வீட்டை வாடகைக்கு விடும்போது ஜாக்கிரையாக இருக்க வேண்டும் என்பதற்கு இன்னொரு காரணம் உருவாகி இருக்கிறது. வீட்டை வாடகைக்கு எடுத்து புதுவிதமான மோசடியில் ஈடுபடுவது இப்போது அதிகரித்து வருகிறது. இதைப்பற்றி வீட்டு உரிமையாளர்கள் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

27
House owner tips

வாடகை வீடு மோசடி எப்படி நடக்கிறது? முதலில் வாடகைக்கு குடியிருக்க வீடு கேட்டு வருவார்கள். அடிப்படையான எல்லா விஷயங்களையும் பேசிய பிறகு வாடகை ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டு, ஆறு மாதங்களுக்கோ ஒரு வருடத்துக்கோ உரிய அட்வான்ஸ் தொகையையும் செலுத்துவிடுவார்கள்.

37
Tenants Scam

பிறகு வீட்டில் குடியேறி சில மாதங்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் போகும். ஓரிரு மாதங்கள் சென்றதும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வீட்டைக் காலி செய்யப் போகிறோம் என்று சொல்வார்கள். வழக்கமாக பலரும் சொல்வதைப் போல, பணிபுரியும் இடத்தில் டிரான்ஸ்பர் வந்துவிட்டது என்பது போல ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்வார்கள்.

47
House rent agreement

வீட்டைக் காலி செய்வதற்கு முன் தாங்கள் செலுத்தியிருந்த அட்வான்ஸ் பணத்தைக்கூட வாங்காமல் சென்றுவிடுவார்கள். வாடகைக்கு இருந்தவர்கள் இப்படி அவசரமாக வெளியேறிய பிறகு, அவர்கள் கொடுத்த அட்வான்ஸ் பணம் நமக்கு லாபம்தான் என ஹவுஸ் ஓனர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், இதற்குப் பிறகுதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.

57
Tenants agreement

வாடகைக்குக் குடியிருந்தவர்கள் காலிசெய்து சென்ற கொஞ்ச நாட்களில், உங்கள் வீட்டு முகவரியில் இருந்து போலி நிறுவனம் ஒன்று பதிவுசெய்யப்பட்டு இருக்கிறது என்றும் அதன் மூலம் ஜிஎஸ்டி மோசடி நடைபெற்றுள்ளது என்றும் ஹவுஸ் ஓனருக்கு நோட்டீஸ் வரும். இதுபோன்ற மோசடி நடக்குன்போது, தற்போதைய சட்ட விதிகளின்படி, வீட்டை வாடகைக்கு விட்ட வீட்டு உரிமையாளருக்கும் மோசடியில் பங்கு இருப்பதாகக் கருதப்படும். இது வீட்டு உரிமையாளர்களுக்கு பெரிய பிரச்சினையை ஏற்படுத்துவிடும்.

67
GST Scams

இதுபோன்ற மோசடியில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையுடன் இருப்பதுதான் சிறந்த வழி. அதற்காக என்ன செய்ய வேண்டும்? வாடகை ஒப்பந்தம் போடும்போதே, அதில் வீட்டை குடியிருப்புக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் எந்தவிதமான வணிகப் பயன்பாட்டுக்கும் அனுமதி இல்லை என்றும் குறிப்பிட வேண்டும். வாடகை வீட்டின் முகவரியில் எந்த நிறுனவம் அல்லது தொழிலைப் பதிவுசெய்யக் கூடாது என்று தெளிவாக ஒப்பந்தத்தில் கூறவேண்டும்.

77
How to avoid property fraud

வாடகைக்குக் குடியிருக்க விரும்புகிறவர்கள் இந்த முக்கியமான நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டால் எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு குறைவு. வாடகை வீடு மூலம் நடைபெறும் ஜிஎஸ்டி முறைகேடு புதிதாகத் தலைதூக்கி இருக்கும் நிலையில் ஹவுஸ் ஓனர்கள் ஒப்பந்தம் விஷயத்தில் எச்சரிகையாக இருக்கவேண்டியது அவசியம்.

click me!

Recommended Stories