ஒரு காலத்தில் கடன் வாங்குவது பெரிய செயல்முறையாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் கடன் பெறும் முறை எளிதாகியுள்ளது. சாதாரண மக்களும் எளிதாக கடன் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாம் எந்த நோக்கத்திற்காக கடன் வாங்குகிறோம் என்பதன் அடிப்படையில் வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. விவசாயத்திற்காக கடன் வாங்கும் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இல்லையெனில் தனிநபர் கடன், வீட்டுக் கடன் வாங்கினால் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் வட்டி தொடர்பான விதிகள், மானியங்கள் வேறுபட்டவை.