டிசம்பர் 31, 2025 மற்றும் ஜனவரி 1, 2026 ஆகிய தேதிகளில் வங்கிகள் செயல்படுமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. கிளை சார்ந்த பணிகளை செய்ய வேண்டியவர்கள் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.
புதிய ஆண்டு நெருங்கி வரும் நிலையில், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 அன்று வங்கிகள் செயல்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே அதிகமாக எழுந்துள்ளது. ஆண்டு முடிவு நாளில் பலர் வங்கி தொடர்பான முக்கிய பணிகளை முடிக்க திட்டமிடுவார்கள். மேலும், புத்தாண்டு நாளில் வங்கிக்கு சென்று ஒரு புதிய தொடக்கத்தை செய்ய நினைப்பவர்களும் உள்ளனர். ஆனால், முன் தகவல் இல்லாமல் வங்கிக்கு சென்றால் நேரமும் உழைப்பும் வீணாகும் நிலை உருவாகலாம்.
24
புத்தாண்டு வங்கி விடுமுறை
இதனால் வங்கி சேவைகள் முழுமையாக பாதிக்கப்படுமா என்ற கவலை தேவையில்லை. UPI, மொபைல் பேங்கிங், இணைய வங்கி சேவைகள் மற்றும் ஏடிஎம் சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் செயல்படும். பண பரிமாற்றம், பில் கட்டணம், ஏடிஎம் மூலம் பணம் எடுப்பு போன்றவை தொடரும். ஆனால், செக் கிளியரன்ஸ், டிராஃப்ட், கேஒய்சி அப்டேட், கணக்கு தொடர்பான ஆவணப் பணிகள் போன்றவற்றை செய்ய வேண்டியவர்கள், டிசம்பர் 31க்கு முன்போ அல்லது ஜனவரி 1க்கு பிறகோ திட்டமிட்டுச் செய்வது சிறந்தது.
34
டிசம்பர் 31 வங்கி விடுமுறை
டிசம்பர் 31, 2025 (புதன்கிழமை) அன்று நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படுவதில்லை. இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலின்படி, மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள வங்கி கிளைகள் முழுமையாக மூடப்பட்டிருக்கும். மற்ற அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்.
அடுத்து, அனைவரும் அதிகம் எதிர்பார்க்கும் ஜனவரி 1, 2026 ( வியாழக்கிழமை) குறித்து பார்ப்போம். புத்தாண்டு தினமாக இருப்பதால், சில முக்கிய நகரங்களில் வங்கி கிளைகள் இயங்காது. அந்த நகரங்கள்: ஐசவுல், சென்னை, காங்க்டாக், இம்பால், இடாநகர், கோஹிமா, கொல்கத்தா மற்றும் ஷில்லாங். உள்ளூர் திருவிழா மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக இங்கு கிளை மட்டத்திலான சேவைகள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.