மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், முதியோருக்கு மாதம் ரூ.5000 வரை பென்ஷன் கிடைக்கும். 18 - 40 வயதுக்குட்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து, குறைந்த மாதாந்திர கட்டணத்தில் எதிர்கால நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
வாழ்க்கையின் எதிர்காலத்தை பாதுகாக்க சேமிப்பு மற்றும் திட்டமிடல் அவசியமானது. இன்று பலர் தங்கள் உடனடி தேவைகளை மட்டும் கவனித்து, நாளைய காலத்தை மறந்துவிடுகிறார்கள். இதை மனதில் கொண்டு, மத்திய அரசு சில சிறப்பு பென்ஷன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமானது அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana – APY) ஆகும்.
25
முதியோர் பென்ஷன் திட்டம்
இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், முதியோருக்கு மாதம் ரூ.5000 வரை அரசிடம் இருந்து பென்ஷன் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் நோக்கம், வேலை செய்ய முடியாத வயதில், முதியோருக்கு நிதி பாதுகாப்பு அளிப்பதே. சிறிய வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், சாதாரண குடும்பத்தினரும் இதில் சேர முடியும். மாதாந்திரமாக செலுத்த வேண்டிய தொகையும், கிடைக்கும் பென்ஷனும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டது.
35
அரசு ஓய்வூதிய திட்டம்
அதனால் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும் என பயனாளர்கள் தெளிவாக அறிந்திருக்க முடிகிறது. அடல் பென்ஷன் திட்டத்தில் சேர வேண்டிய தகுதி 18 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவர்களே இதில் சேர முடியும். இளம் வயதிலேயே சேருவோருக்கு குறைவான கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒருவர் 30 வயதில் இந்த திட்டத்தில் சேர்ந்து, மாதம் ரூ.5000 பென்ஷன் பெற விரும்பினால், அவருக்கு மாதந்தோறும் சுமார் ரூ.577 செலுத்த வேண்டும்.
இது 30 ஆண்டுகள் தொடர்ந்து செலுத்தப்பட்டால், 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.5000 பென்ஷன் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் சேர்வதற்கான நடைமுறை மிகவும் எளிதானது. அருகிலுள்ள வங்கி அல்லது தபால் நிலையத்தில் சென்று, அடல் பென்ஷன் யோஜனா (APY) படிவத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். அதோடு, இணைய வசதியிலும் இந்த திட்டத்தில் சேரலாம். அதற்காக அருகிலுள்ள CSC மையத்தை அணுகி, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
55
அடல் பென்ஷன் யோஜனா
மொத்தத்தில், முதியோர் காலத்தில் குடும்பத்தினரிடம் சார்ந்து வாழ வேண்டாம் என நினைப்போருக்கு, அடல் பென்ஷன் யோஜனா மிகச் சிறந்த நிதி பாதுகாப்புத் திட்டமாகும். சிறிய அளவில் சேமிப்பு செய்தாலே, வயது முதிர்வில் உறுதியான மாதாந்திர வருமானம் கிடைக்கும்.