Are You Single?!:இதை படித்தால் விரைவில் திருமணம்! Marriage Loan Tips!

Published : Jun 19, 2025, 01:37 PM ISTUpdated : Jun 19, 2025, 02:06 PM IST

திருமணம் என்பது பெரும் செலவுகளை உள்ளடக்கிய நிகழ்வு. திருமணத்திற்கு தேவையான நிதியை திரட்ட, வங்கிகள் திருமணக் கடன் வழங்குகின்றன. இந்த கடன் மூலம் திருமண செலவுகளை எளிதாக நிர்வகிக்க முடியும்.

PREV
18
"சிங்கிள்சை" டபுள்ஸ் ஆக்கும் வங்கிகள்

திருணம் ஆகாதவர்களுக்கு பேச்சுலர் என்று சொல்லி வந்த காலம் போய், தற்போது "அங்கிள்" மாதிரி "சிங்கிள்" என்ற பெயர் எங்கும் நிறைந்துள்ளது. படித்து முடித்து வேலைக்கு சேர்ந்த பிறகு, ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு துணைதேடும் படலத்தை தொடங்குகின்றனர் பெற்றோர். இந்தியாவை பொறுத்தவரை சிலர் காதல் திருணம் செய்து கொண்டாலும், பெரும்பாலானோர் ஆரேஞ்சுடு மேரேஞ் செய்து கொள்கின்றனர். எந்த திருமணமாக இருந்தாலும், அதற்கு ஒரு கணிசமான தொகை தேவைப்படுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

28
திருமணம் எனம் அழகிய நிகழ்வு

இந்தியாவில் திருமணம் என்பது வெறும் இரண்டு மனிதர்களின் சங்கமம் மட்டுமல்ல; அது குடும்பங்களின் பந்தத்தை உறுதியூட்டும் புனித நிகழ்வாகவும், உறவுகளை ஒன்றிணைக்கும் ஒரு சமூக விழாவாகவும் அமைகிறது. இது உற்சாகத்துடனும், பரவசத்துடனும், உறவுகளின் கூடிய வருகையுடனும் நிகழும் ஒரு மிக முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது. ஆனால் இந்த சந்தோஷ நிகழ்வின் பின்னால் நிறைந்திருப்பது பெரும் செலவுகளாகும்.பெரும்பாலோனோர் குழந்தைகள் திருமணத்திற்காகவே பொருள் சேர்த்து வைக்கின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் திருமணம் முடிவான பிறகே நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்காகவே தற்போது திருமண கடன் வழங்கும் திட்டத்தை வங்கிகள் தொடங்கியுள்ளன. அழகான திருமண மண்டபம், புதிய ஆடைகள், நகைகள், கலை நிகழ்ச்சிகள், உணவு ஏற்பாடுகள் என ஒவ்வொன்றும் பட்டியலிட்டு பார்க்கையில் செலவுகளின் பட்டியல் நீளமாகத்தான் இருக்கிறது. இது பலரின் சேமிப்பைத் தாண்டி செலவாகும் நிலைக்கு கொண்டு செல்லும். இந்நிலையில், திருமணக் கடன் என்பது ஒரு நிதி ஆதாரமாக உதவியாக அமைகிறது.

38
திருமணக் கடன் என்பது இதுதான்

திருமணத்திற்கு தேவையான பண வசதியை ஏற்படுத்தும் வகையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் தனிப்பட்ட (Personal) கடனே திருமணக் கடன். இது ஒரு unsecured loan ஆகும், அதாவது இதற்காக சொத்துகளை அடமானம் வைக்க வேண்டியதில்லை. உங்கள் வருமானம், கடன் திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் கிரெடிட் மதிப்பெண்களை (Credit Score) பொறுத்து கடன் வழங்கப்படுகிறது.

48
திருமணக் கடனின் முக்கிய அம்சங்கள்

திருமணக் கடன்களுக்கு பொதுவாக 10% முதல் 24% வரை வட்டி விதிக்கப்படுகிறது. வங்கி, NBFC என நிறுவனத்தின்படி இது மாறுபடும். திருமணத்திற்காக வங்கிகள் தரும் கடன் தொகை ரூ.50,000 முதல் ரூ.25 லட்சம் வரையாக உள்ளது.தவணை காலம்: 1 வருடம் முதல் 5 ஆண்டுகள் வரை. திருமண கடன்களுக்கு ஆன்லைனில் எளிமையாக விண்ணப்பிக்கும் தற்போது உள்ளது. சில சமயங்களில் 24 மணி நேரத்தில் கடன் அனுமதி கிடைக்கும்.

58
தகுதியும் ஆவணங்களும்

திருமண கடன்கள் பெறுவதற்குகான வயது வரம்பு 21 முதல் 60 வரை. மாத வருமானம் ரூ.15,000 அல்லது ரூ.25,000த்திற்கு மேல் இருந்தால் நல்லது.அரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்யும் நபர்கள், சுயதொழிலாளிகளும் இக்கடனை பெற முடியும். கிரெடிட் ஸ்கோர் 750க்கும் மேல் இருந்தால் விரைவில் கடன் அனுமதி கிடைக்கும். ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாளச் சான்றுகள் அவசியம். முகவரி சான்றுகள், மாத சம்பளச் சீட்டுகள், வங்கி அறிக்கைகள், பணியிட சான்று அல்லது வருமான வரி அறிக்கைகளுடன் சேர்த்து திருமண அழைப்பிதழை அளிக்க வேண்டும்.

68
திருமண கடன் - இவை அவசியம்

திருமண கடன்களை வாங்குவோர் பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு தேர்வு செய்யுங்கள், வங்கிகளும் NBFC நிறுவனங்களும் வட்டி விகிதத்தில் வேறுபாடுகளை கொண்டிருக்கும். அதிக வட்டி கொடுக்கும் நிறுவனங்களை தவிர்ப்பது நலம். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப, மாத தவணையை சரியாக திட்டமிடுவது அவசியம். இது தவணை செலுத்தும் போது அழுத்தம் இல்லாமல் இருக்க உதவும். மறைமுக கட்டணங்கள் (Hidden Charges): செயல்முறை கட்டணம் (Processing Fees), முன்கட்டண கட்டணம் (Pre-closure Fees) போன்றவற்றை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும். கடன் திரும்ப செலுத்த தவறினால் ஏற்படும் பாதிப்பு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தவணைகளை தவறாமல் செலுத்த வேண்டும். தவறினால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படலாம், எதிர்காலத்தில் வங்கி நிதி வசதிகள் பெற முடியாமல் போகலாம்.

78
திருமணக் கடனின் நன்மைகள்

பணக்காரன் மட்டுமல்ல, நடுத்தர மற்றும் வேலைவாய்ப்பு உள்ள அனைவரும் இந்த கடனை எளிதில் பெறலாம். சொத்துகளை அடமானம் வைக்க தேவையில்லை. மாத தவணை வசதியால், நிதி அழுத்தம் இல்லாமல் செலவுகளை திட்டமிட முடியும்.ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதே நேரத்தில், எந்த இடத்திலும் இருந்தும் செயல்படுத்தலாம். கடன் என்பது உதவிக்கரம் போல இருந்தாலும், திட்டமில்லாமல் அதை பயன்படுத்துவது நிதி சிக்கல்களை உருவாக்கும். உங்கள் திருமண செலவுகளை ஒழுங்குபடுத்தி, தேவைக்கு ஏற்ப குறைந்த தொகையிலேயே கடன் எடுங்கள். பெருமைக்காக அதிக செலவு செய்து திருமணத்தை நடத்தாமல் திட்டமிட்டு குறைந்த செலவில் திருமணத்தை நடத்தினால் கடன்களில் இருந்து எளிதில் தப்பிக்கலாம்.

88
எப்போது திருமணம்! தேதி வச்சாச்சா!

கனவு திருமணத்தை நிஜமாக்க, உங்கள் சேமிப்புக்கு கூடுதலாக திருமணக் கடன் ஒரு பயனுள்ள நிதி கருவியாக இருக்கலாம். ஆனால், இது ஒரு பொறுப்புடன் அணுக வேண்டிய செயல். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளையும், கடன் திருப்பிச் செலுத்தும் திறனையும் முன்னிட்டு சிந்திக்க வேண்டும். இது போன்ற நிதி தீர்வுகளை புழக்கத்தில் கொண்டு வரும்போது, நிதி ஆலோசகரின் வழிகாட்டுதலோடு செயல்படுவது நல்லது. சிறந்த வாழ்க்கையின் புதிய கட்டத்தை ஆரம்பிக்க, நிதி கட்டுப்பாட்டோடு உங்களை அமைத்துக்கொள்வது உங்கள் கனவுகளுக்கும் ஒரு வலிமையான அடித்தளமாக அமையும்.

Read more Photos on
click me!

Recommended Stories