
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், கிரெடிட் கார்டு பயன்பாடு நமது நிதி வாழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதியாக மாறியுள்ளன. ஆனாலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிப்பதற்கேற்ப கிரெடிட் கார்டு மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இவ்வகை மோசடிகள் நமது நிதி பாதுகாப்பை மட்டுமின்றி நம்பிக்கையையும் குலைக்கும் அளவுக்கு ஆபத்தாக இருக்கின்றன எனவும் நடுத்தட்டு மக்கள் அதில் அதிக அளவில் சிக்கி தவிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.கிரெடிட் கார்டு மோசடிகள் எப்படி நடைபெறுகின்றன, அதற்கான சட்டப்பாதுகாப்புகள் என்ன, பொதுமக்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பன குறித்து தெளிவாக அறிந்து கொள்ளுவது அவசியம்.
போலியான வங்கிக் களஞ்சியங்கள், மின்னஞ்சல்கள், அல்லது மெசேஜ்கள் மூலமாக உங்கள் கார்டு விவரங்களை திருடும் முறை தற்போது முதலிடத்தில் உள்ளது. ATM அல்லது PoS இயந்திரங்களில் கருவிகள் பொருத்தி உங்கள் கார்டு விவரங்களை பிரதி எடுத்து திருட்டில் ஈடுபடுகின்றனர். மேலும் SIM Swap Fraud: மோசடிக்காரர்கள் உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி OTP போன்ற முக்கிய தகவல்களை பெற்றுக்கொள்கிறார்கள், பின்னர் அதன்மூலம் தங்களது நோக்கத்தை நிறைவேற்றி கொள்கிறார்கள்.போலியான இணையதளங்கள் மூலம் உங்கள் கார்டு விவரங்களை திருடுகிறார்கள். உங்கள் கார்டை தொலைந்தாலோ அல்லது திருடப்படுமானால், அதைப் பயன்படுத்தி எந்தவொரு ஆட்களும் பரிவர்த்தனை செய்ய முடியும்.
இந்திய தண்டனைச் சட்டம் (IPC):
கம்பனிகள் சட்டம் (Companies Act):
ஒரு நபராக நீங்கள் கிரெடிட் கார்டு மோசடியின் பாதிப்புக்கு ஆளானால், உடனடியாக கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உங்கள் கார்டை உடனடியாக பிளாக் செய்யவும்.வங்கிக்கு அதிகாரப்பூர்வ புகார் அளிக்க வேண்டியது கட்டாயம்.72 மணி நேரத்திற்குள் புகார் அளிக்க வேண்டியது கட்டாயம். அப்படி புகார் அளிக்கப்படும் பட்சத்தில் வங்கி 90 நாட்களுக்குள் தீர்வு வழங்க வேண்டும். போலீசில் FIR பதிவு செய்தால் சட்டரீதியான பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிரெடிட் கார்டு மற்றும் இணைய மோசடிகள் மிகவும் வேகமாக அதிகரித்துள்ளன. ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட தரவுகளின்படி, 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை) கார்டு மற்றும் இணைய மோசடிகள் 6,699 வழக்குகளாக இருந்தன. ஆனால் அதற்குப் பிறகு 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை) இது 4 மடங்கு அதிகரித்து 29,082 வழக்குகளாக உயர்ந்தது. இது மொத்தமாக 986% விகித அதிகரிப்பாகும். இந்த அதிகரிப்பான மோசடி வழக்குகள், இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிக்கின்றபோதும் பாதுகாப்பு விழிப்புணர்வு குறைவாகவே இருப்பதைப் பிரதிபலிக்கின்றன.
2023-24 ஆண்டு முழுக்க மொத்தமாக 36,075 நிதி மோசடி வழக்குகள் பதிவாக, அதில் 80% வரை கிரெடிட் கார்டு மற்றும் இணையம் சார்ந்த மோசடிகளே இடம்பெற்றன. 2024-25 நிதியாண்டின் முதல் பாதி (ஏப்ரல் 2024 முதல் செப்டம்பர் 2024 வரை) மட்டும் பார்த்தால், 12,069 கார்டு மற்றும் இணைய மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. எனினும், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட முன்பதிவுகள் காரணமாக, 2025 ஆம் ஆண்டின் முதல் அரை ஆண்டில் மோசடி வழக்குகள் 50% குறைவடைந்துள்ளதாக RBI தரவுகள் கூறுகின்றன
எத்தணை மணிநேரத்தில் புகார் அளிக்க வேண்டும்
இந்தியாவில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகியுள்ளது. ஒருவர் தனது கிரெடிட் கார்டில் சந்தேகமான பரிவர்த்தனை கண்டால், உடனடியாக வங்கியை தொடர்புகொண்டு கார்டை பிளாக் செய்ய வேண்டும். 72 மணி நேரத்துக்குள் புகார் அளிக்கப்படுமாயின், நுகர்வோருக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். மேலும், வங்கிகள் இந்த விவகாரங்களை 90 நாட்களுக்குள் தீர்த்து வைக்க வேண்டும்.
இப்படி செய்யாதீங்கப்பா!
பொதுமக்கள் PIN, CVV, OTP போன்ற நுண்ணிய தகவல்களை யாருடனும் பகிரக்கூடாது எனவும் மாதந்தோறும் கார்டு பரிவர்த்தனை அறிக்கையை சரிபார்க்க வேண்டும் எனவும் வங்கிகள் அறிவுறுத்துகின்றன. வங்கியின் அதிகாரப்பூர்வ செயலிகளையே பயன்படுத்த வேண்டும் எனவும் பொதுவான Wi-Fi இணையதளங்களை தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.முடிவாக, கிரெடிட் கார்டு மோசடிகள் இந்தியாவில் நாளுக்குநாள் உயரும் நிலையில், நுகர்வோர் விழிப்புணர்வும், வங்கிகளின் பாதுகாப்பு அடிப்படைகளும் ஒருசேர இணைந்து செயல்பட்டாலே இந்தக் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்.
இதுதான் நல்லது!
கிரெடிட் கார்டு மோசடிகள் ஒரு சாதாரண குற்றமாக இல்லாமல், பயனாளர்களை நிதியாகவும் மனதிலுமாகவும் பாதிக்கும் அபாயகரமான குற்றமாக மாறியுள்ளது. அதற்கெதிராக சட்டங்கள் இருந்தாலும், விழிப்புணர்வும் தன்னாட்சி நடவடிக்கைகளும் தான் நம் பாதுகாப்பின் முதல்படிகள். சட்ட அறிவும், நிதிநயமும், பாதுகாப்பு நடைமுறைகளும் இணைந்தாலே நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும்.