மக்கள் எப்போதும் திருமணத்திற்கு செல்ல விரும்புகிறார்கள் என்றே சொல்லலாம். அன்றுதொட்டு இன்றைய காலம் வரை திருமணம், சடங்கு, விழா, நிகழ்ச்சி என அனைத்திற்கும் முக்கியத்துவம் நாம் தருவது வழக்கமான விஷயமாகும். திருமணம் என்பது இது இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, சமூக உருவாக்கம், எண்ணங்கள் மற்றும் நடத்தை ஆகியவற்றை உள்ளடக்கியது. உண்மையில், திருமணம் என்பது குடும்பம் மற்றும் சமூகத்தின் ஆரம்ப அடித்தளம் என்று கூறலாம். சமூகம் இங்கிருந்து கட்டமைக்கப்படுகிறது.