Gold Rate
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இது அனைவரும் அறிந்தது. குறிப்பாக தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
Chennai Gold Rate
கடந்த ஜூலை 17-ம் தேதி வரை தங்கம் விலை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை சரசரவென குறைந்து வந்தது. பின்னர் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடிக்கிறது.
Yesterday Gold Rate
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,240-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,280-க்கு விற்பனையானது.
Today Gold Rate
இன்றைய (அக்டோபர் 20) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. சவரன் ரூ.58,240-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.7,280-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,735-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.61,880-ஆக விற்பனையாகிறது.
Silver Rate
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.107,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.