PPF முதலீடு: தினமும் 100 ரூபாய் சேமித்தால் ஈசியா 10 லட்சம் சேர்க்கலாம்!

First Published | Oct 20, 2024, 1:00 PM IST

பொது வருங்கால வைப்பு நிதியில் (PPF) முதலீடு செய்வதன் மிகப்பெரிய நன்மை, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமல்ல, முதலீடு செய்யப்படும் உங்கள் பணத்தின் பாதுகாப்பிற்கு அரசாங்கமே உத்தரவாதம் அளிக்கிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள்.

Public Provident Fund

இன்றைய காலகட்டத்தில், பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஒவ்வொருவரும் தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமித்து, ஓய்வுக்குப் பின் நிலையான வருமானத்தைப் பெற விரும்புகிறார்கள். முதலீடு செய்யப்படும் பணமும் பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள்.

PPF Investment

பொது வருங்கால வைப்புநிதி (PPF) திட்டம் மிகவும் பிரபலமானது. இதில் 7 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தைப் பெறுவதுடன், உங்கள் முதலீட்டின் பாதுகாப்பிற்கு அரசாங்கமே உத்தரவாதம் கொடுக்கிறது. ஒவ்வொரு நாளும் வெறும் 100 ரூபாயைச் சேமித்தால், இந்த அரசுத் திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் திரட்டலாம். அது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

Tap to resize

Public Provident Fund Scheme

முதலீட்டைப் பொறுத்தவரை, இதுபோன்ற பல திட்டங்கள் உள்ளன. அவை சிறந்த வருமானத்தையும் வழங்குகின்றன. இருப்பினும், பெரும்பாலானவற்றில் ரிஸ்க் அதிகமாக உள்ளது. ஆனால் PPF முதலீட்டில் அப்படிப்பட்ட ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை. பணத்தின் பாதுகாப்புக்கு அரசு வழங்கும் கேரண்டி இருக்கிறது.

PPF benefits

PPF கணக்கு 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். விரும்பினால், இதனை மேலும் நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது. இது தவிர, இத்திட்டத்தில் உள்ள மற்றொரு முக்கியமான நன்மை, கூட்டு வட்டி. இது முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வருமான கிடைப்பதை உறுதி செய்கிறது.

PPF account

இந்த அரசாங்கத் திட்டத்தில் கணக்கு தொடங்கி, ஆண்டுக்கு வெறும் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் டெபாசிட் செய்யலாம். இதில் முதலீட்டுக்கான வட்டி விகிம் 7.1 சதவீதம் வழங்கப்படுகிறது. ஆனால், அரசு இதனை மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பல வங்கிகளின் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களை விட அதிக வட்டி பெற முடியும்.

PPF Interest Rate

தினசரி ரூ.100 சேமிப்பதன் மூலம் இந்தத் திட்டத்தில் ரூ.10 லட்சம் எப்படிக் கிடைக்கும் என்று பார்க்கலாம். தினமும் 100 ரூபாய் சேமித்து, ஒவ்வொரு மாதமும் ரூ.3000 முதலீடு செய்தால், ஓராண்டில ரூ.36,000 முதலீடு செய்யப்படும். PPF கால்குலேட்டர் மூலம் கணக்கிட்டுப் பார்த்தால், முதிர்வு காலம் வரை, அதாவது 15 வருடங்கள் இந்த முறையில் முதலீடு செய்தால், மொத்தம் ரூ.9,76,370 கிடைக்கும். இதில் முதலீடு செய்த தொகை ரூ.5.40 லட்சமாகவும், அரசு கொடுக்கும் வட்டி ரூ.4,36,370 ஆகவும் இருக்கும்.

Public Provident Fund maturity

15 ஆண்டுகள் கழித்து முதிர்வு அடைந்த பிறகும் பிபிஎஃப் கணக்கை மேலும் நீட்டிக்க முடியும். இதுபோன்ற சூழ்நிலையில், 5 ஆண்டுகள் இதே போல முதலீட்டைத் தொடர்ந்தால், இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். 20 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.7,20,000 ஆக இருக்கும். இதற்கு வட்டியாக ரூ.8,77,989 கிடைக்கும். இதன்படி, ஒரு நாளைக்கு 100 ரூபாய் சேமிப்பதன் மூலம், 20 ஆண்டுகளில் ரூ.15,97,989 நிதியைத் திரட்டலாம்.

Latest Videos

click me!