2023ம் ஆண்டின் தொடக்கத்திலேயே தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்து புது உச்சத்தை தொட்டது. இல்லத்தரசிகள் மற்றும் நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை ஆனது. 2023ம் ஆண்டின் அட்ச திருதியை இந்த வாரம் வர இருப்பதால், தங்கத்தை வாங்க பொதுமக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,650க்கும் விற்பனையானது.
இன்றைய (ஏப்ரல் 19) நிலவரப்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு 15 உயர்ந்து 5,665க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சவரனுக்கு 120 உயர்ந்து 45,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது.