இனி பென்ஷன் பணம் தாமதம் இல்லாமல் கிடைக்கும்! கவலையே படாதீங்க!
ஓய்வூதியம் தொடர்பான புகார்களை எளிதில் தீர்க்கும் வகையில், ஓய்வூதியத்திற்கான புதிய ஒழுங்குமுறை மன்றம் ஒன்றை உருவாக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
ஓய்வூதியம் தொடர்பான புகார்களை எளிதில் தீர்க்கும் வகையில், ஓய்வூதியத்திற்கான புதிய ஒழுங்குமுறை மன்றம் ஒன்றை உருவாக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
ஓய்வு பெற்ற பிறகு, ஒருவர் சேமிப்பு அல்லது ஓய்வூதியத்தை நம்பி வாழ வேண்டியிருக்கும். ஓய்வூதியம் பெறுவதில் மக்கள் எந்தப் பிரச்சினையையும் சந்திக்காமல் இருப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க, அரசாங்கம் ஒரு மன்றத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.
ஓய்வூதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவதற்கான தயாரிப்புப் பணிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. இதில் புகார்களைத் தீர்ப்பதற்கான குறை தீர்க்கும் வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகிறது. இது குறித்து அரசு வட்டாரத் தகவல்களை மேற்கோள் காட்டி தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஓய்வூதியம் தொடர்பான புகார்களை விரைவாக தீர்க்க அனைவருக்கும் பொதுவான ஒழுங்குமுறை தரநிலை தேவை என்று மத்திய அரசு கருதுகிறது என அதிகாரி ஒருவர் கூறுகிறார். இந்த முயற்சியில், பல்வேறு நிறுவனங்களின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களை ஒருங்கிணைப்பது பற்றியும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.
மற்றொரு அதிகாரி கூறுகையில், நமது நாட்டில் ஓய்வூதிய பாதுகாப்பு குறைவாக உள்ளது. அதற்காக புதிய திட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) தன்னார்வ அடிப்படையிலான திட்டம். EPFO இன் கீழ் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (EPS) சம்பள வரம்பு மாதத்திற்கு ரூ.15,000 ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு பெரும் பகுதி ஊழியர்கள் ஓய்வூதியப் பலன்களை இழந்து வருகின்றனர் என்றார்.
மத்திய அரசு உருவாக்க இருக்கும் மன்றம், தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டங்களை ஒரு ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் கொண்டுவந்து, அவற்றின் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, அவற்றின் செயல்படுத்தலை எளிதாக்கும் என எதிர்பார்ப்படுகிறது. அனைவருக்கும் ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகளையும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் இதுபற்றிய முன்ன்றிவிப்பை வெளியிட்டிருந்தார்.