அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்

Published : Dec 07, 2025, 07:33 AM IST

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் ரிலையன்ஸ் பவர், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் பல தனிநபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

PREV
14
அனில் அம்பானி

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி குழுமத்தின் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தைச் சுற்றி ஒரு புதிய வழக்கு உருவாகியுள்ளது. ரூ.68 கோடி மதிப்பில் போலி வங்கி உத்தரவாதம் வழங்கியதாகக் கூறப்படும் சட்டவிரோதத் தொகை பரிமாற்ற விவகாரத்தில், அமலாக்கத்துறை (ED) ரிலையன்ஸ் பவர் மேலும் 10 பேரை எதிரியாக்கி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு பணமோசடி தடுப்பு சட்டம் (PMLA) கீழ் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

24
ரிலையன்ஸ் மோசடி

இந்த வழக்கில், ரிலையன்ஸ் பவரின் முன்னாள் சிஎஃப்ஓ அசோக் குமார் பால், ரிலையன்ஸ் என்யு பிஇஎஸ்எஸ் லிமிடெட் மற்றும் ரோசா பவர் சப்ளை கம்பெனி (ரிலையன்ஸ் பவரின் துணை நிறுவனங்கள்), ரிலையன்ஸ் குழும நிர்வாகி புனித் நரேந்திர கார்க் உள்ளிட்டோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, ஒடிசாவைச் சேர்ந்த போலி நிறுவனம் பிஸ்வால் டிரேட்லிங் பிரைவேட் லிமிடெட், அதன் மேலாளர் பார்த்தசாரதி பிஸ்வால், வர்த்தக நிதி ஆலோசகர் அமர்நாத் தத்தா, பியோதீன் கெமிக்கல்ஸ் நிறுவனம் மற்றும் சில தனிநபர்கள் குற்றச்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

34
ரிலையன்ஸ் பவர்

இதில் முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால், ரிலையன்ஸ் என்யு BESS லிமிடெட், இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனிடமிருந்து (SECI) டெண்டரைப் பெற, ரூ.68.2 கோடி மதிப்புள்ள போலி வங்கி கேரண்டியை சமர்ப்பித்ததாகும். இந்த மோசடி வெளியான பிறகு, ரிலையன்ஸ் குழுமம் ஒரே நாளில் IDBI வங்கி மூலம் புதிய வங்கி உத்தரவாதத்தை வழங்க முயன்றது. ஆனால் SECI அந்த உத்தரவாதத்தை ஏற்க மறுத்துவிட்டது.

44
பணமோசடி வழக்கு

டெண்டரைப் பாதுகாக்கும் முயற்சி, அதிகாரிகள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் கொல்கத்தா பிரிவு மூலம் வெளிநாட்டு வங்கி உத்தரவாதத்தையும் ஏற்படுத்தியது முனைந்ததாக தகவல். இதற்கிடையில், ரிலையன்ஸ் நிறுவனம் தான் மோசடியில் ஏமாந்ததாக கூறி பிஸ்வால் நிறுவனத்தை குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்கிறது. இந்த வழக்கு விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories