வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?

Published : Dec 05, 2025, 12:54 PM IST

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளதால், வீடு, கார் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையும். இந்த மாற்றத்தால், புதிய மற்றும் ஏற்கனவே கடன் பெற்ற வாடிக்கையாளர்களின் மாதாந்திர இஎம்ஐ தொகை குறையும்.

PREV
14
ரெப்போ விகிதக் குறைப்பு

டிசம்பர் 5-ல் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் குறைத்து 5.25% ஆகக் குறைத்தது. இதன் தாக்கம் வீடு, கார் மற்றும் தனிநபர் கடன்களை நேரடியாகப் பிரதிபலிக்கும். ரெப்போ விகிதம் குறைந்தால் வங்கிகளுக்கு குறைந்த வட்டியில் நிதி கிடைக்கிறது. இந்த நன்மையை வாடிக்கையாளர்களுக்கு கடன் வட்டி, இஎம்ஐ குறைப்பு வடிவில் வங்கிகள் வழங்குகின்றன. எனவே, புதிய கடன் பெறுபவர்களும், ஏற்கனவே இஎம்ஐ செலுத்துபவர்களும் இந்த சலுகையை அனுபவிக்கலாம்.

24
இஎம்ஐ எவ்வளவு குறையும்?

ஒரு 20 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் 20 ஆண்டுக்கு எடுத்திருந்தால், புதிய இஎம்ஐ சுமார் ரூ.310 வரை குறையலாம். 30 லட்சம் கடனாக இருந்தால் ரூ.465 வரை தளர்ச்சி காணலாம். மேலும், 10 லட்சம் கார் கடன் வாங்கி 5 ஆண்டுக்கு மாதம் ரூ.19,000 இஎம்ஐ செலுத்துபவர், இப்போது ரூ.250 வரை சேமிக்கலாம். 5 லட்சம் தனிநபர் கடன் மூன்று ஆண்டுக்கு இருந்தது இஎம்ஐ ரூ.150 வரை குறையக்கூடும். நீண்ட கால கடன்கள், குறிப்பாக வீட்டுக் கடன்கள், அதிக பலனைப் பெறுகின்றன.

34
எந்த கடன்கள் மலிவாகும்?

இந்த வட்டி குறைப்பால் வீட்டுக் கடன் வாங்குபவர்கள் அதிக நிவாரணம் பெறுவர், ஏனெனில் நீண்ட கால இஎம்ஐயில் வட்டி குறைப்பு பெரிய தாக்கத்தை தருகிறது. அதே நேரத்தில், கார் கடன் (3–5 ஆண்டுகள்), தனிநபர் கடன், கல்விக் கடன் போன்றவற்றிலும் சிறிய அளவில் மாத சேமிப்பு கிடைக்கும். இந்த மாற்றம் வங்கி கடன்களை இன்னும் எளிதாக்கும்.

44
பொருளாதாரம் மற்றும் சந்தையில் தாக்கம்

ரெப்போ விகிதம் குறைவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும், வங்கிகள் கடன் வழங்குவதில் முனைப்பைக் காட்டும். கடன் தேவை உயரும், நுகர்வு மற்றும் கொள்முதல் கூடும். ரிசர்வ் வங்கி FY26 GDP வளர்ச்சி கணிப்பை 7.3% என்று உயர்த்தியுள்ளது. பணவீக்கம் 2% வரை குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் பங்குச் சந்தை, வீட்டு சந்தை, முதலீட்டு துறைகளில் நேர்மறை உணர்வு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories