SBI ஆன்லைன் பேங்கிங் யூஸ் பண்றீங்களா? புதுசா வந்திருக்க IMPS கட்டணம்.. எவ்ளோன்னு தெரிஞ்சுக்கங்க!

Published : Jan 13, 2026, 06:27 PM IST

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது ஆன்லைன் IMPS பரிமாற்றங்களுக்கு புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது. பிப்ரவரி 15, 2025 முதல், ரூ.25,000-க்கு மேல் அனுப்பப்படும் தொகைக்கு சிறிய கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

PREV
15
எஸ்பிஐ கட்டண உயர்வு

டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவித்து வரும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது ஆன்லைன் ஐஎம்பிஎஸ் (IMPS) கட்டணங்களில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் பிப்ரவரி 15, 2025 முதல் அமலுக்கு வருகிறது.

இதுவரை மொபைல் ஆப் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மூலம் செய்யப்படும் IMPS பரிமாற்றங்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாமல் இருந்தது. ஆனால், இனி பெரிய தொகையை அனுப்பும்போது சிறிய தொகையை கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

25
யாருக்குப் பாதிப்பு?

சாதாரண வாடிக்கையாளர்களுக்கு இந்த மாற்றத்தால் பெரிய பாதிப்பு இருக்காது. காரணம், ரூ.25,000 வரை செய்யப்படும் பணப்பரிமாற்றங்களுக்கு எப்போதும் போல எந்தக் கட்டணமும் கிடையாது. சிறிய அளவிலான தொகையை அனுப்புபவர்கள் தாராளமாக பழையபடியே பணத்தை அனுப்பலாம்.

35
புதிய கட்டண விவரங்கள்

ரூ.25,000-க்கு மேல் அனுப்பும்போது மட்டும் கீழ்க்கண்ட கட்டணங்கள் வசூலிக்கப்படும்:

• ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை: ரூ.2 + ஜிஎஸ்டி

• ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை: ரூ.6 + ஜிஎஸ்டி

• ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை: ரூ.10 + ஜிஎஸ்டி

45
வங்கி சொல்வது என்ன?

டிஜிட்டல் சேவைகளைப் பராமரிக்கவும், அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் இந்த சிறிய கட்டண உயர்வு அவசியம் என்று வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் மொபைல் ஆப் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மூலம் செய்யப்படும் ஆன்லைன் பரிமாற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும். நீங்கள் நேரடியாக வங்கி கிளைக்குச் சென்று IMPS செய்தால், பழைய கட்டண முறையே தொடரும்.

55
நிபுணர்களின் ஆலோசனை

பெரிய தொகையை டிஜிட்டல் முறையில் அனுப்ப நினைப்பவர்கள், IMPS-க்குப் பதிலாக NEFT அல்லது RTGS போன்ற கட்டணமில்லா (அல்லது குறைவான கட்டணம் கொண்ட) சேவைகளைப் பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories