Aadhaar Mobile Number: ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் தொடர்பாக பலருக்கும் தெரியாத ஒரு விதி உள்ளது. தவறான புரிதலால் பலர் தேவையற்ற கவலையில் இருக்கின்றனர்.
இன்று இந்தியாவில் ஆதார் அட்டை ஒரு முக்கிய அடையாள ஆவணமாக மாறியுள்ளது. வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் அரசு நலத்திட்டங்களைப் பெறுவது வரை பல சேவைகளுக்கு ஆதார் அவசியமாகியுள்ளது. மேலும், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணும் பல ஆன்லைன் சேவைகளுக்கு முக்கிய பங்காகிறது. இதனால், மொபைல் எண் மாற்றம் தொடர்பான விதிகள் குறித்து பலருக்கும் சந்தேகங்கள் எழுகின்றன.
25
பலருக்கு தெரியாத மொபைல் எண் விதி
புதிய சிம் வாங்கிய பிறகு அல்லது தொலைபேசி எண்ணை மாற்றிய பிறகு, ஆதாரில் அந்த எண்ணை புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால், "எத்தனை முறை மொபைல் எண்ணை மாற்றலாமா?" என்ற கேள்விக்கு பலருக்கும் தெளிவான பதில் தெரியாது. சிலர் இதற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு இருப்பதாக கூட நம்புகின்றனர்.
இந்த சந்தேகத்திற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெளிவான விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ஆதார் கார்டு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். இதற்கு எந்த அதிகபட்ச வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. புதிய சிம் வாங்கினாலும், சேவை வழங்குநரை மாற்றினாலும் அல்லது பழைய எண்ணை இழந்தாலும் புதிய எண்ணை இணைக்க முடியும்.
மொபைல் எண்ணை மாற்ற விரும்புபவர்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தை அணுக வேண்டும். அங்கு கைரேகை அல்லது கண் கருவிழி சரிபார்ப்பு மூலம் அடையாளம் உறுதி செய்யப்படும். அதன் பின்னர் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டது, புதுப்பிப்பு கோரிக்கை எண் வழங்கப்படும். இதன் மூலம் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்.
55
கவனிக்க வேண்டிய விஷயம்
மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பது இன்று பல டிஜிட்டல் சேவைகளுக்கான அடிப்படை தேவையாக மாறியுள்ளது. எனவே, பழைய எண் செயலிழந்தால் அல்லது புதிய எண் பயன்படுத்தத் தொடங்கினால், அதை உடனடியாக ஆதாரில் புதுப்பிப்பது நல்லது. இதன் மூலம் ஓடிபி சரிபார்ப்பு உள்ளிட்ட பல சேவைகளை எந்த தடையும் இன்றி பயன்படுத்த முடியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.